என் மலர்
உள்ளூர் செய்திகள்

அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி

- பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த மேல் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 66). இவருக்கும் இவரது தம்பி கோவிந்தராஜுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் இருந்ததாக தெரிகிறது. கடந்த 17-ந் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஜெயராமனை குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த ஜெயராமனின் மனைவி ஜெயலட்சுமி யையும் குத்திவிட்டு மிரட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கணவன் மனைவி 2 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக ஜெயராமனை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுஇரவு ஜெயராமன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.