என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் கலெக்டர் ஆபீசில் கிராம மக்கள் முற்றுகை
- செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்
- இயற்கைக்கு புறமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தகவல்
திருப்பத்தூர்:
விவசாய நிலப் பகுதிகளில் செல்போன் டவர் அமைக்க இருப்பதை கண்டித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா மனு அளித்தனர் அதன் விவரம் வருமாறு:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்கும் பணியை தடை செய்ய வேண்டும் என மனு அளித்தனர்.
மேலும் அந்த மனுவில்
எங்களது கிராமம் விவசாயம் சார்ந்த தொழிலை அடிப்படையாகக் கொண்டு அருகருகே வீடுகள் அமைந்துள்ள கிராமம். மேலும் ஊர் மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் சார்ந்த கூலி வேலையும் ஆடு மாடு கோழி வளர்த்து வருகிறோம். இயற்கையோடு இணைந்து சுகாதாரமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எங்கள் ஊரில் செல்போன் டவர் அமைக்க அனுமதி பெற்றுள்ளதாகவும் அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மேலும் இந்தப் பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் இயற்கைக்கு புறம்பான பாதிப்புகள் மக்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும். எங்கள் கிராமம் ஒட்டிய ஏலகிரி மலை பகுதியில் நம் தேசிய பறவையான மயில்கள் கடந்த பல வருடங்களாக இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகிறது.
இங்கு டவர் அமைத்தால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சானது தாயின் கருவில் வளரும் சிசுவின் மூளை பாதிப்பு, இருதய நோய் பாதிப்பு, பக்கவாதம் போன்ற இயற்கைக்கு புறமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்தும் நில உரிமையாளரும் நிறுவன உரிமையாளரும் மறுத்துவிட்டனர்.
அதன் பிறகு எங்கள் கிராம மக்கள் கோரிக்கையை கடந்த மாதம் கிராம சபா கூட்டத்தில் முன் வைத்தோம். அதன் பிறகு ஊராட்சி மன்ற தலைவர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டார அலுவலர்களும் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாற்று இடத்தில் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு இதில் கூறியுள்ளது.