search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரைப் பாலத்தின் மீது பைக் மோதி வாலிபர் பலி
    X

    தரைப் பாலத்தின் மீது பைக் மோதி வாலிபர் பலி

    • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கரும்பூர் ஊராட்சி பெரிய கரும்பூர் பகுதியை சேர்ந்த சாமுண்டி மகன் சந்தோஷ் (வயது 26).

    இவர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் வேன் ஓட்டும் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு 11 மணி அளவில் ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் சுடுகாடு அருகே தரைப் பாலத்தின் மீது பைக் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சந்தோஷ் இறந்தார்.

    உமராபாத் போலீசார் இடத்துக்கு விரைந்து சென்று சந்தோஷ் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×