என் மலர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சியடையாத வாழைக்கன்றுகள் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் நாளை ஆய்வு
- வாழை, உரிய வளர்ச்சி அடையாததால் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
- கோவை வேளாண்மை பல்கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், நாளை 9-ந்தேதி நேரில் வந்து உரிய வளர்ச்சியடையாத வாழைக்கன்றுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
அவிநாசி:
அவிநாசி வட்டம், சேவூர் அடுத்த தண்டுக்காரன் பாளையம், ராமியம்பாளையம், குமாரபாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆதராம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தனியார் நிறுவனம் ஒன்றில், கடந்த 2022 செப்டம்பர் மாதம் வாழைக்கன்றுகள் வாங்கி பயிரிட்டனர். வாழை, உரிய வளர்ச்சி அடையாததால் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
வாழைக்கன்றுகளை விற்ற தனியார் நிறுவனத்தினர், விவசாயிகள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை அவிநாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் மோகனன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் உமா சங்கரி, துணை தாசில்தார் சாந்தி, சேவூர் ஆர்.ஐ., திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி வாழை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், கோவை வேளாண்மை பல்கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், நாளை 9-ந்தேதி நேரில் வந்து உரிய வளர்ச்சியடையாத வாழைக்கன்றுகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்வர் என்று முடிவு செய்யப்பட்டது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சட்ட விழிப்புணர்வு ஆணை மாநில செயலாளர் சதீஷ்குமார், வேளாண் தொழில் முனைவோர் மன்ற மாநில செயலாளர் வேலுச்சாமி, நவீன்பிரபு, ஜோதி அருணாச்சலம், குருசாமி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.