என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாடு விடும் விழாவில் 115 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது
- 55 ஆண்டுகளாக நடந்து வருகிறது
- முதலிடம் வந்த காளைக்கு பரிசாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங் கலத்திலிருந்து ஆற்காடு செல்லும் ரோட்டில் உள்ள ராணுவப்பேட்டை என்கிற கம்மவான்பேட்டை கிராமத்தில் 55-ம் ஆண்டு காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து 115 காளைகள் கொண்டு வரப்பட்டன. பஜனை கோயில் தெருவில் வாடி வாசல் வழியாக ஓடவிடப்பட்டது.
இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற சூப்பர் ஸ்டார் முத்து காளைக்கு ரொக்கப் பரிசு ரூ.75 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற வாணியம்பாடி அன்வர் காளைக்கு ரூ.65 ஆயிரம், 3-ம் இடம் பெற்ற நெல்வாய் ராஜாபாபு காளைக்கு ரூ.55 ஆயிரம் உள்பட 55 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுகளை தவமணி, பிரதீப், விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணை தலைவர் லோகலட்சுமி குமரன் ஆகியோர் வழங்கினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
மேலும் விழாவை வேலூர் தாலுகா தாசில்தார் செந்தில்குமார், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா, கம்மவான்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.