என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆரணி மேல்சீசமங்கலம் ஏரி நிரம்பியது
- உபரி நீரை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்
- ஏரிக்கரையில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது
ஆரணி:
ஆரணி சுற்று வட்டார பகுதிகளிலேயே மிகப்பெரிய ஏரியாக மேல் சீசமங்கலம் ஏரி விளங்குகின்றன.
இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 665 ஏக்கர் கொண்டது. இந்த ஏரி கடந்த 10ஆண்டுகளாக ஏரி நீர் நிரம்பாமல் கடந்த ஆண்டு ஏரி முழு கொள்ள ளவை எட்டியது.
மேலும் அதே போல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக ஆரணி சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகின்றன.
இதனால் தற்போது மீண்டும் மேல்சீசமங்கலம் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து மேல்சீசமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ் தலைமையில் கிராம பொதுமக்கள் ஏரிக்கரையில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பின்னர் மேல்சீசமங்கலம் ஏரி உபரி நீரை வெளியேற்றி மலர் தூவி வரவேற்றனர்.
இதனால் மேல் சீசமங்கலம் திருமணி முனுகபட்டு நாவல்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கிளல் உள்ள ஏரிகளுக்கு சென்றால் அந்த பகுதியில் உள்ள விவசாயம் செழிக்க வழிவகை செய்யும் எனவும் கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.