search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளசமுத்திரம் கோவிலில் அர்ச்சுனன் தபசு
    X

    காளசமுத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த அர்ச்சுனன் தபசு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    காளசமுத்திரம் கோவிலில் அர்ச்சுனன் தபசு

    • குழந்தை வரம் வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

    நேற்று காலை கோவில் முன்பு தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாடக நடிகர் ஒருவர் அர்ச்சுனன் வேடமனிந்து தபசு மரம் ஏறி ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெறும் நிகழ்ச்சியை நடித்து காட்டினார்.

    தவத்தை கலைக்க சிவனும் பார்வதியும் வேடன் வேடத்தியாக வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி திருமணமாகி குழந்தை வரம் வேண்டி பெண்கள் வணங்கினர்.

    வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிஅளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சம்பத், ஊராட்சி தலைவர் வள்ளியம்மாய் ராஜேந்திரன், துணை தலைவர் மணிமேகலை அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமிசிவலிங்கம், முன்னாள் தலைவர் மாணிக்கவேலு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×