என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓடையில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஒன்றியம் கடலாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம் பூங்காவனத்தம்மன் கோவில் ஓடை பாலத்தின் கீழ் தண்ணீரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதந்து கிடந்தன.
இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடலாடி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து கவுந்த நிலையில் உள்ள வாலிபரின் உடலை தூக்கிய போது உடல் முழுவதும் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்து சுமார் 4,5 நாட்கள் ஆகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. உடனே உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இறந்த நபர் பற்றி விசாரணை செய்ததில் அதே பகுதி டேங்க் தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 30) என்றும் கூலி தொழிலாளி எனவும் தெரியவந்தது.
மேலும் இவருக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
இறந்த நபர் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திருப்பவில்லை என்பது தெரிய வந்தன. மேலும் இறந்த நபர் எப்படி இறந்தார் தெரியவில்லை.
முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து போட்டுவிட்டு உள்ளார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.