என் மலர்
உள்ளூர் செய்திகள்
செய்யாறு அனக்காவூரில் கிராமப்புற திறன் பயிற்சி திட்ட முகாம்
- 200-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர்
- ஒன்றிய குழு தலைவர் சான்றிதழ்கள் வழங்கினார்
செங்கம்:
செய்யாறு அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட அலகு சார்பில் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் சையது சுலைமான் தலைமை தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அனக்காவூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ஹரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சிக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமையில் சான்றிதழ்களை வழங்கினர்.