என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
சேத்துப்பட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

- 2 மாதங்களுக்கு முன்பு ஜமாபந்தி நடைபெற்றது
- 40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, போளூர், சாலையில் உள்ள தாலுகா அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மோகன்ராஜ், தலைமை தாங்கினார்.மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுராமன், வட்ட பொருளாளர் ராஜசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்ட செயலாளர் ஜான்சன், வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் போராட்டத்தை வரைமுறைப்படுத்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து பணி சார்ந்த பதிவேட்டில் விடுபட்டுள்ள அனைத்து பணிகளையும் பதிவேட்டில் ஏற்ற வேண்டும், மேலும் 2 மாதங்களுக்கு முன்பு ஜமாபந்தி நடைபெற்றது.
இதற்கான கிராம நிர்வாக அலுவலருக்கான படியை உடனடியாக வழங்க வேண்டும், உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, சேத்துப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் 40மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட இணை செயலாளர் சதீஷ், நன்றி கூறினார்.