என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
புதூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
Byமாலை மலர்15 Aug 2022 2:38 PM IST
- ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையொட்டி விழா நடந்தது
- பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்
செங்கம்:
செங்கம் அடுத்த புதூர் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மொட்டை அடித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் புதூர் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலின் உள் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து கோழிகளை நேர்ந்து விட்டு வழிபட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்கோவிலில் பால் ஊற்றி முட்டைகள் வைத்தும் வழிபட்டனர்.
Next Story
×
X