என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![செய்யாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செய்யாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/27/1856183-1630331-1cheyyar.webp)
X
செய்யாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
செய்யாறு:
செய்யார் ஒன்றியம், கடுகனூர் கிராமத்திலும், அனக்காவூர் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்து 2 இடங்களிலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
திறந்து வைத்து பேசுகையில்:-
நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்தாண்டை போலவே தற்போது முதல் கட்டமாக செய்யாறு தொகுதி முழுவதும் 20 இடங்களிலும், அடுத்த வாரத்தில் இன்னும் கூடுதலாக 10 இடங்களிலும் என 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.
இதனை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி அரசின் நியாயமான விலையை பெற்று பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்று பேசினார்.
Next Story
×
X