என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரணம்பாக்கம் கிராமத்தில் மனுநீதிநாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த படம்.
மனுநீதிநாள் முகாம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, தாலுகா தேவிகாபுரம் பிர்காவில் உள்ள பெரணம்பாக்கம், கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.
விழாவிற்கு சேத்துப்பட்டு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சமூக பாதுகாப்பு தாசில்தார் குமரவேல், வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் தேவிகாபுரம், பிர்கா வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாள ராகசெய்யாறு (சிப்காட்) தனித்துணை கலெக்டர் நாராயணன், கலந்து கொண்டார்.
முகாமில் 90 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றியகுழு தலைவர் ராணிஅர்ஜுணன், தனித்துணை கலெக்டர் நாராயணன், ஆகியோர் வழங்கி பேசினார்கள்.
விழாவில் ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன், மாவட்ட அட்மா குழு உறுப்பினர் எழில்மாறன், வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்பாபு, மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் குமரேசன், நன்றி கூறினார்.