என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருணாநிதிக்கு சிலை வைக்க பெண் கவுன்சிலர் கோரிக்கை
- ஆரணி நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
- 39 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் என்ஜினீயர் விஜயராஜ காமராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். மேலும் இதில் திமுக காங்கிரஸ் மதிமுக விடுதலைசிறுத்தை அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதில் 20வது வார்டு பெண் கவுன்சிலர் ரேவதி பேசியதாவது :-
ஆரணி டவுன் மைய பகுதியில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சிலையை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து பள்ளிகளில் காலை உணவு திட்டம் வரவேற்பு பெற்றுள்ளதால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் இரவின் நிழல் திரைப்படத்தினை ஆரணியில் உள்ள திரைய ரங்கங்களில் திரையிடபடும் போது கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 39 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.