என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2022/11/21/1795385-god.jpg)
X
அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை
By
மாலை மலர்21 Nov 2022 3:06 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மூலவருக்கு மூலிகைகளால் அபிஷேகம்
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக அய்யப்பனுக்கு பல்வேறு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தி பாடல்களை பாடினர்.
இதைத் தொடர்ந்து மங்கல மேள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ அய்யப்பனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க விளக்கு பூஜையில் திரளான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
X