என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் தேர் திருவிழா
- முன்னாள் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
- பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் வழங்கபட்டது
ஆரணி:
ஆரணிஅடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 151-வது ஆண்டு தேரோட்ட பிரம் மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி காப்பு காட்டுதலுடன் தொடங்கியது,
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நடந்தது. அதனை தொடர்ந்து ஆடு, கோழி பலியிட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரனுக்கு கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டன.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முரளி, ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா பாபு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் அசோக்கு மார் உள்பட திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த திருத்தேர் மாட வீதிகளின் வழியாக வலம் வந்தது. தேர் மீது உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் ஆகியவை வழங்கபட்டது.