என் மலர்
உள்ளூர் செய்திகள்

14-வது வார்டு பகுதியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு

- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியின்14-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் கே.பி. மணி. கோடை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும் 14-வது வார்டு பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம், காமராஜ் நகர், காசி நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் 10 இடங்களில் சிறு மின்விசையுடன் கூடிய குடிநீர் தொட்டிகளை வார்டு கவுன்சிலர் கே.பி.மணி தனது சொந்த செலவில் அமைத்திருந்தார்.
இதன் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் கே.பி.மணி தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். திமுக நகர செயலாளர் சி கே அன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பொதுமக்களுக்கும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் இனிப்புகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
பேரூராட்சி உறுப்பினர்கள் பாக்யராஜ், அம்பிகா ராமதாஸ், கனகா பார்த்திபன், ஜீவா மனோகர், வணிகர் கள், திமுக நிர்வாகிகள் வினோத், சின்னா, எடிஎம் மணி, பார்த்திபன், ராஜேஷ், வழக்கறிஞர் முத்துக்குமார், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் 14வது வார்டு பகுதி ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.