என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![செய்யாறில் தூய்மை பணி விழிப்புணர்வு ஊர்வலம் செய்யாறில் தூய்மை பணி விழிப்புணர்வு ஊர்வலம்](https://media.maalaimalar.com/h-upload/2022/06/05/1706698-1094619-1cheyyar.jpg)
செய்யாறு ஜோதி எம்.எல்.ஏ, நகராட்சி ஆணையாளர் ரகுராம், நகர மன்ற தலைவர் மோகன வேலு ஆகியோர் நகர தூய்மைஉறுதிமொழி ஏற்கப்பட்ட போது எடுத்த படம்.
செய்யாறில் தூய்மை பணி விழிப்புணர்வு ஊர்வலம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டார்.
- தூய்மை நகரமாக மாற்ற உறுதிமொழி ஏற்பு.
செய்யாறு:
முதல்வர் ஆணைக்கிணங்க நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற வகையில் வருடம் முழுவதும் தூய்மை பணியினை நடை முறைப்படுத்தும் தொடக்க விழா நேற்று ஆரணி கூட்டு ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் மோகன் வேலு முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ரகுராம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ இதில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் செய்யாறு நகரம் தூய்மை நகரமாக மாற்றும் பொருட்டு தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் நகரை தூய்மை சேவைப் பணி விழிப்புணர்வு ஊர்வலத்தை எம்எல்ஏ ஜோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம், அரிமா சங்கம், நகராட்சி அனைத்து பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.