search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்
    X

    மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்

    • 71 காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் 125-ம்ஆண்டு காளைவிடும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த 250 காளைகள் பங்கேற்று ஓடியது.

    இதில் வேகமாக ஓடி முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற காளைகளுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட 71 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக வாடி வாசல் வழியாக கலசபாக்கம் எம் எல் ஏ சரவணன் காளைவிடும் திருவிழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர்.வி.சேகர், நாட்டாண்மை சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், கண்ணமங்கலம்போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காளை விடும் விழாவில் முன்னாள் எம் எல் ஏக்கள் பன்னீர்செல்வம், தூசி மோகன், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் தஞ்சிம்மாள்லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளைச் விழாக்குழுவினர் இளைஞர்கள், பொது மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×