என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
- அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார்.
தணிக்கை குழு உறுப்பினரும், சட்டபேரவை துணை தலைவருமான கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார்.
கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீ்ர்மானங்கள் விவரம் வருமாறு:-
திருவண்ணாமலையில் கடந்த 8-ந் தேதி அண்ணா நுைழவு வாயில் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை ஆகியவற்றை திறந்து வைக்க வருகை தந்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் நன்றி தெரிவிப்பது, கடந்த 9-ந் தேதி அன்று திருக்கோவிலூர் சாலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 246 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கீழ்பென்னாத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கழக மருத்துவரணி துைண தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஜோதி, பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் பாரதிராமஜெயம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், தெற்கு மாவட்ட அமைப்பாளர்கள் கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, பொன்.முத்து, இரா.ஜீவானந்தம், ஏ.ஏ.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், சுந்தரபாண்டியன், மெய்யூர் சந்திரன், ஆறுமுகம், ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.