என் மலர்
உள்ளூர் செய்திகள்
செய்யாறு- வந்தவாசி, போளூரில் வீரவணக்க நாள் பேரணி
- கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்
- 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாளை முன்னிட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.
வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் வந்தவாசியில் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மச்சந்திரன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியானது வந்தவாசி 5 கண் பாலத்தில் இருந்து தொடங்கி தேரடி பகுதி பஜார் சாலை பழைய பஸ் நிலையம் கோட்டை மூலை வழியாக சென்று குளத்துமேடு பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் அருகே சென்று முடிவடைந்தது.
பின்னர் இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக உயர்நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு சேலம் எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த பேரணியில் பாமக மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், நகர செயலாளர் பேட்டரி வரதன் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்யாறில் நேற்று வன்னியர் சங்கம் சார்பில் 1987 இல் இட ஒதுக்கீடு உரிமை போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்க நாளை முன்னிட்டு வன்னியர் சங்கத்தினர் சுமார் 2000 பேர் செய்யாறு பெரியார் சிலை அருகில் இருந்து ஆரணி கூட்ரோடு வரை வழக்கறிஞர் கே. பாலு தலைமையில் பேரணி நடைபெற்றது.
பேரணி முடிவில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சு. கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் தி.கா சீனிவாசன், கி. ஜெய்சங்கர், த. புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தி.க.காத்தவராயன் வரவேற்றார். வழக்கறிஞர் கே. பாலு கலந்து கொண்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சங்கர், நகர செயலாளர் மார்க்கெட் சங்கர், பாமக நிர்வாகி கோகுல், கார்த்தி உள்பட பாமகவினர் கலந்து கொண்டனர்.
போளூர் பஸ் நிலையத்தில் மாலை 6 மணி அளவில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம் சென்றனர் முக்கிய வீதி வழியாக வந்த மௌன ஊர்வலம் நீண்ட பஸ் நிலையத்தை வந்து அடைந்து உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மு.மணி மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கா ஏழுமலை மாவட்ட தலைவர் கலந்து கொண்டனர் மற்றும் ரா கலைமணி மாநில பொதுக்குழு உறுப்பினர், அ பாலமூர்த்தி மாவட்ட அமைப்பு செயலாளர், கணேசன் மாநில செயற்குழு உறுப்பினர், மு ஏழுமலை மாவட்ட துணை தலைவர் சுப்பு என்கின்ற பாலசுப்பிரமணியம் மாவட்ட இளைஞர் அணிசங்க செயலாளர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் கே சி குமரன் நன்றி கூறினார்.