என் மலர்
திருவண்ணாமலை
- கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- ஆரூத்ரா தரிசன நாளில் மகாதீப மை வினியோகம் செய்யப்பட உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. கடந்த 26-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்தது.
அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 11-ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த ஆண்டிற்கான மகா தீபம் ஏற்றப்படும் நிறைவு நாளையொட்டி மகா தீபத்தை தரிசனம் செய்ய நேற்று மாலை கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.
மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து இன்று அதிகாலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
ஆரூத்ரா தரிசன நாளில் மகாதீப மை வினியோகம் செய்யப்பட உள்ளது.
- கடந்த 26-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
- கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.
கடந்த 26-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் இன்றுடன் நிறைவடைகிறது.
தொடர்ந்து நாளை காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரையை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.
கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
வருகிற 27-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அப்போது மகா தீப மை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும்.
அதன் பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- மிக்ஜம் புயல் மழை காரணமாக நடவடிக்கை
- உணவு, போர்வை, தலையணை ஆகியவற்றை வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி மேநீர் தேக்கத்தொட்டி அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட இருளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
தற்போது மிக்ஜம் புயல் மழை காரணமாக ஆரணி ஆர்.டி.ஒ. தனலட்சுமி உத்தரவின் பேரில், தாசில்தார் மஞ்சுளா ஆலோசனைப்படி, மண்டல துணை தலைவர் திருவேங்க டம், கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் ஆகியோர் இருளர் குடும்பத்தினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணமங்கலம் முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.
உணவு, போர்வை, தலையணை ஆகியவற்றை வழங்கினார்.
- மின் கசிவு ஏற்பட்டதால் விபரீதம்
- சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த வட இலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 65). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விநாயகம், சங்கர் என 2 மகன்கள் உள்ளனர்.
விநாயகம் சென்னை யிலும், சங்கர் வேலூரிலும் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் மீனா மட்டும் குடிசை வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீனா மகன் விநாய கத்தை பார்ப்பதற்காக குடிசை வீட்டை பூட்டிக்கொண்டு சென்னைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று வீட்டில் மின் கசிவு ஏற்பட்டது.
இதனால் திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் இருந்தவர்கள் வெடி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வந்து பார்த்தபோது குடிசை வீடு எரிந்து கொண்டிருந்தது.
தீயை அணைத்தனர்
பின்னர் செய்யாறு தீயணைப்புத்துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. அருகில் இந்த மற்றொரு சிலிண்டர் தீப்பிடித்துக் கொண்டிருந்ததை தீயணைப்பு வீரர்கள் மேலும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
வீட்டில் யாரும் இல்லாததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனமழையின் காரணமாக நடவடிக்கை
- கலெக்டர் அறிவிப்பு
ேவங்கிக்கால்:
கனமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் பா.முருகேஷ் விடுமுறை அறிவித்துள்ளார்.
பருவமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை தாக்கம் அதிகம் உள்ள செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
- அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது
- வட்டாட்சியர்கள் தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடனான ஆய்வு கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் வெள்ளம் பாதிக்க கூடிய பகுதிகளை கள ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
உயிர் காக்கும் உபகர ணங்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சா லைத்துறை பாலங்கள் மற்றும் மதகுகளை சுத்தம் செய்து தடையில்லா நீரோட்டத்திற்கு தேவை யான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.
வட்டாட்சியர்கள் தன்னார்வலர்களையும், ஆப்தமித்ரா தன்னார்வ லர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இயற்கை இடர்பாடு களால் இறக்கும் கால்நடைகளுக்கு 48 மணி நேரத்தில் நிவாரண உதவிகள் வழங்க ஏதுவாக கால்நடை பராம ரிப்புத்துறை கால்நடை களுக்கான பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும்.
சேதமடைந்த பொது கட்டிடம், பாழடைந்த கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, நேர்முக உதவியாளர் வெற்றிவேல், சப்-கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர்கள் மந்தாகினி, தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தகவல்
- கயிறுகள் மூலம் மீட்க நடவடிக்கை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உட்கோட்டத்தில் உள்ள ஆரணி டவுன், கண்ணமங்கலம், களம்பூர், சந்தவாசல் உள்ளிட்டவை களில் உள்ள வழக்கு சம்பந்தமாக கோப்புகளை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மழைகாலங்களில் புயல் காரணமாக திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள சுமார் 153 ஏரி, குளங்களை தலைமை காவலர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு மூலம் கண்காணித்து வருகின்றோம்.
உடையும் அபாயம் உள்ள ஏரி குளங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதுகாக்க கயிறுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளது. ஆரணி நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லாமல் பைபாஸில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் டி.எஸ்.பி ரவிசந்திரன் இன்ஸ்பெ க்டர்கள் ராஜங்கம், சுப்பிரமணியன், மகாலட்சுமி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- எழுத்தறிவு திட்ட இணை இயக்குனர் ஆய்வு
- பயிற்சி அளிக்க ஆலோசனை வழங்கினார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம், பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமங்களில் பாரத எழுத்தறிவு கல்வி திட்டம் மூலம் முதியவர்களுக்கு கல்வி கற்பித்தல் நடத்தி வருகின்றனர்.
இத்திட்டத்தினை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் இணை இயக்குனர் பொன் குமார், பார்வையிட்டு மையப் பொறுப்பாளர்கள், கற்போருடன் கலந்துரையாடல் செய்தார்.
கற்போர் கையெழுத்து இடவும், வங்கி மற்றும் தபால் அலுவலகம் செல்லும்பொழுதும், பஸ் பயணம் செய்ய ஏதுவாக படித்துவிட்டு பயணிக்கவும் எழுதவும் எண்களை கற்றுக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என ஆய்வின் போது ஆலோசனை வழங்கினார்.
அப்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமரேசன், வட்டார கல்வி அலுவலர் இரா. அருணகிரி, ஆசிரியர் பயிற்றுநர் ச.கோவர்த்தனன், இராமச்ச ந்திரமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அன்பரசி, செண்பகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபவிழா முடிந்து மலை தீபம் எரியும் 11 நாட்களும் தீப தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வருவார்கள்.
- விவிஐபி, சிபாரிசு தரிசன கடிதங்களை தவிர்க்கும் விதமாக அம்மணி அம்மன் கோபுர வாசலையே மூடிவிட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த 26-ந்தேதி 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபம் 11 நாட்கள் வரை காட்சியளிக்கும். இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பவுர்ணமி, விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபவிழா முடிந்து மலை தீபம் எரியும் 11 நாட்களும் தீப தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வருவார்கள்.
இந்த ஆண்டு விடுமுறை நாளான நேற்று கோவிலை சுற்றி பொது தரிசனம் மற்றும் அம்மணி அம்மன் கோவில் வழியாக செல்லும் கட்டண தரிசன வரிசையில் கோவிலுக்கு வெளியே மதில் சுவர் வரை வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் . இதனால் நெரிசல் ஏற்பட்டது.
கோவில் உட்பிரகாரங்களில் பக்தர்கள் இரவு 12 மணி வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். விவிஐபி, சிபாரிசு தரிசன கடிதங்களை தவிர்க்கும் விதமாக அம்மணி அம்மன் கோபுர வாசலையே மூடிவிட்டனர்.
கோவிலில் சுற்றியுள்ள ஓட்டல்கள், பெட்டிக்கடைகள், மாட வீதிகள், கிரிவலப்பாதை, சின்னக்கடை தெருக்களில் டீ, குடிநீர் பாட்டில்கள் விற்பனை சூடுபிடித்தது.
அதே போல் விடுமுறை நாளான இன்றும் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கொட்டும் மழையிலும் கோவில் வெளியே உள்ள சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
விடுதிகளில் ஆன்லைனில் மிக அதிக கட்டணங்களில் அறைகள் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தனர்.
#WATCH | Tiruvannamalai, Tamil Nadu: Devotees were waiting in long queues to visit Arunachaleswarar temple while it was raining.
— ANI (@ANI) December 3, 2023
(Visuals from the early morning) pic.twitter.com/NVcl4tr0Gb
- வருகிற 12-ந்தேதி நடக்கிறது
- முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் துறையால் சாராய வழக்குகளில் பலவகையான 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் வருகிற 12-ந் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் டிசம்பர் 10 மற்றும் 11-ந் தேதிகளில் நுழைவு கட்டணமாக ரூ.100, முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்திற்கு அதற்கான ரசீதே வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.
பொது ஏலம் குறித்து கூடுதல் விபரங்களை அறிய திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04175 233920 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
- நகர மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு
- அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்பு பணிக்கான உபகரணங்களை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகராட்சி 13.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
இதில் 1,035 மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 720 கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளது. பல இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை நகரில் மழைக்காலங்களில் தண்ணீரால் பாதிக்கப்படும் இடங்களான தாமரை நகர், மாரியம்மன் கோவில் தெரு, கீழ்நாத்தூர் காலனி, காந்தி நகர், பாவாஜி நகர், கடலை கடை சந்திப்பு, குமரக்கோவில் தெரு, கன்னிகோவில் தெரு, அருணகிரிபுரம், அவலூர்பேட்டை ரோடு ஆகியவை தாழ்வான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
நகரில் 11 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
300 மணல் மூட்டைகள், ஒரு டன்இரும்பு தடுப்புகள், 5 நவீன அறுவை இயந்திரம், அதிக வெளிச்சத்தை தரும் 10 மின் விளக்குகள், 3 ஜெனரேட்டர்கள், மழைகோட் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசம், மண்வெட்டி, நைலான் கயிறு ஆகியவை தயார் நிலையில் வைக்க ப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்க வை க்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. பருவமழையை எதிர்கொள்ள 4 குழுக்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தெரிவித்தார்.
ஆய்வின் போது நகராட்சி கமிஷனர் ந.தட்சணாமூர்த்தி, சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர், உதவி பொறியாளர் ரவி மற்றும் ஷெரீப் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- அதிகாரிகள் விசாரணை
- இடியுடன் கனமழை பெய்தது
ஆரணி:
கண்ணமங்கலம் அடுத்த புது பேட்டையை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு சொந்தமாக கொளத்தூரில் நிலம் உள்ளது.
அங்கு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது.
அப்போது சரஸ்வதி கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகள் மீது திடீரென இடி தாக்கியது. இதில் மாடுகள் பரிதாபமாக இறந்தது. சரஸ்வதி மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக கொளத்தூரில் நிலத்திற்கு வந்தார்.
அப்போது கொட்டகையில் கட்டி வைத்திருந்த மாடுகள் இடி தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இறந்து கிடந்த மாடுகளை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.