search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உபகரணங்கள்
    X

    பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உபகரணங்கள்

    • நகர மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு
    • அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்பு பணிக்கான உபகரணங்களை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவண்ணாமலை நகராட்சி 13.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

    இதில் 1,035 மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 720 கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளது. பல இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    திருவண்ணாமலை நகரில் மழைக்காலங்களில் தண்ணீரால் பாதிக்கப்படும் இடங்களான தாமரை நகர், மாரியம்மன் கோவில் தெரு, கீழ்நாத்தூர் காலனி, காந்தி நகர், பாவாஜி நகர், கடலை கடை சந்திப்பு, குமரக்கோவில் தெரு, கன்னிகோவில் தெரு, அருணகிரிபுரம், அவலூர்பேட்டை ரோடு ஆகியவை தாழ்வான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

    நகரில் 11 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    300 மணல் மூட்டைகள், ஒரு டன்இரும்பு தடுப்புகள், 5 நவீன அறுவை இயந்திரம், அதிக வெளிச்சத்தை தரும் 10 மின் விளக்குகள், 3 ஜெனரேட்டர்கள், மழைகோட் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசம், மண்வெட்டி, நைலான் கயிறு ஆகியவை தயார் நிலையில் வைக்க ப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்க வை க்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. பருவமழையை எதிர்கொள்ள 4 குழுக்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தெரிவித்தார்.

    ஆய்வின் போது நகராட்சி கமிஷனர் ந.தட்சணாமூர்த்தி, சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர், உதவி பொறியாளர் ரவி மற்றும் ஷெரீப் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×