என் மலர்
திருவண்ணாமலை
- மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம்.
- மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம்.
தீபத் திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, ½ கிலோ நெய் ரூ.150, ¼ கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கை வசூலிக்கப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வந்து நெய் காணிக்கை செலுத்த முடியாத பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இணைய வழியில் நெய் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் பக்தர்கள் நெய் காணிக்கைக்கான கட்டணம் செலுத்தலாம்.
இந்த தகவல் கோவில் நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் மும்முரம்
- மண்புழு உரம் தயாரித்தல், விற்பனை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.70 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடம், ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம், ரூ.7 லட்சத்தில் தேவரடியான் குளம் சீரமைப்பு பணி, ரூ.1.83 லட்சத்தில் கழிப்பறை கட்டிடம், ரூ.3 லட்சத்தில் திடக்கழிவு உரக்குழி மண்புழு தயாரித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை, கூடுதல் ஆட்சியர்கள் ரிஷப் (திருவண் ணாமலை), ஸ்ருதன் ஜெய் நாராயணன் (விழுப்புரம்), பிரியங்கா (திருவாரூர்), சரண்யா (கடலூர்) ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்தல், பிளாஸ்டிக் அகற்றுதல், மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் விற்பனை குறித்து தூய்மைப் பணியாளர்களிடம் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், உதவி பொறியாளர்கள் சரவணன், சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பாலமுருகன், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார்
- நாளை விழா நடைபெறுகிறது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார்.
நாளை காலை கம்பன் மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரிய டிஜிட்டல் கையெழுத்து இயக்க தொடக்க விழா நடைபெறுகிறது. விழா விற்கு திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை தலைமை எம்.பி. தாங்குகிறார். பொறியாளர் அணி மாநில செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பிரவீன் ஸ்ரீதரன், மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் டாக்டர் சவிதா கதிரவன், டிஎம் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு நீட் தேர்வு ரத்து குறித்த டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், தொ.மு.ச. பேரவை செயலாளர் சவுந்தரராசன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சு.ராஜாங்கம் நன்றி தெரிவிக்கிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செம்பூரை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு (வயது 56). தி.மு.க. வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளராக உள்ளார்.
இவர் நேற்று வேலை சம்பந்தமாக திருவண்ணாமலைக்கு காரை ஓட்டி சென்றார். வேலைகள் முடிந்து வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். சேத்துப்பட்டு அடுத்த கோழி புலியூர் அருகே வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி கார் அருகே உள்ள நிலத்தில் பாய்ந்தது.
இதில் பிச்சைக்கண்ணு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் தேசூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிச்சைக்கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 188 கிராம் தங்கம், ஆயிரத்து 240 கிராம் வெள்ளி கிடைத்தது
- பணிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கம் உள்ளிட்ட கோவில்களில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
ஐப்பசி மாத பவுர்ணமி முடிந்த நிலையில் நேற்று காலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் காணிக்கை உண்டியல்கள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.
இதில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224, 188 கிராம் தங்கம், ஆயிரத்து 240 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
- வேளாண் அதிகாரி எச்சரிக்கை
- மண் வள அட்டை பரிந்துரைப் படி பெற்றுக்கொள்ளலாம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஹரி குமார் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ சாகுபடி தீவி ரமாக நடந்து வருகிறது. எனவே, விவசாய தேவைக்கான யூரியா மற்றும் உரம் கையிருப்பில் வைக்கப்பட் டுள்ளது.
மேலும், மணலியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,800 மெட்ரிக் டன் எம்எப் எல் யூரியா மற்றும் காட்பாடியிலிருந்து 650 மெட் ரிக்டன் கிரிப்கோ யூரியா மற்றும் 1538 மெட்ரிக்டன் என்எப்எல் யூரியா திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதில், 1938 மெட்ரிக் டன் யூரியா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 2050 மெட்ரிக் டன் யூரியா தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து அனுப்ப திட்டமிட்டப்பட்டுள்ளது.
நடப்பு மாதத்தில், 6,429 மெட்ரிக் டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. மேலும், நடப்பு பருவத்திற்கு தேவையான 7164 மெட்ரிக் டன் யூரியா, 2194 மெட்ரிக் டன் டிஏபி, 962 மெட்ரிக் டன் பொட் டாஷ், 513 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5922 மெட்ரிக் டன் காம்ப் ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அல் லது தனியார் உர விற்ப னை நிலையங்களில் ஆதார் எண்ணுடன் மண் வள அட்டை பரிந்துரைப் படி பெற்றுக்கொள்ள லாம். அரசு நிர்ணயித்த விலையை விட கூடுத லாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
மேலும், செயற்கை முறையில் யூரியா மற்றும் உர தட்டுப்பாடு ஏற்படுத் தினால் உரக்கட்டுப்பாடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
- சிறையில் அடைத்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி ஆரணியில் பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார்.
ஆரணி அடுத்த பையூரை சேர்ந்தவர் சரண்(20). பிரியாணிகடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு அடிக்கடி சிறுமி பிரியாணி சாப்பிட வந்துள்ளார். அப்போது சரண் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலை வீசியுள்ளார்.
கடந்த 29-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சிறுமி சென்றார். வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம், பக்கம் என பல இடங்களில் தேடி உள்ளனர். அவர் கிடைக்காததால் இதுகுறித்து சிறுமியின் பெற் றோர் பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சரண் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமியை சரண் கடத்தி வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரணை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஏரி மண் கடத்தியபோது பார்த்ததால் ஆத்திரம்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த புலிவாய் கிரா மத்தைச் சேர்ந்தவர் யமுனா (வயது 52), இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. கடந்த 29-ந்தேதி இரவு 11 மணியளவில் தனது விவசாய நிலத்திற்கு யமுனா ஏரிக்கரை மீது சென்று கொண்டிருந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்த சிவா (32), சசிக் குமார் (30), குணா (32), கோவிந்தன் (42) ஆகியோர் ஏரியில் இருந்து டிராக்டரில் மண் அள் ளிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
யமுனா டார்ச்லைட் அடித்தபடி வந்ததை பார்த்த சிவா உள்ளிட்ட 4 பேரும் டார்ச் லைட் அடித்து எங்களை நோட்டமிட வந்தாயா எனக்கேட்டு யமுனாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் யமுனா விற்கும், சிவா உள்ளிட்ட 4 பேரிடம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து யமுனாவை சரமாரி தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த யமுனா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து யமுனா வந்தவாசி வடக்கு போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குணா, கோவிந்தன், சசிகுமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
மேலும் கைதான 3 பேரையும் வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிவாவை தேடி வருகின்றனர்.
- கலெக்டர் நடவடிக்கை
- தீபத்திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம் விதித்து அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டுள்ளார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
23-ந் தேதி வியாழக்கி ழமை தேரோட்டமும், 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு புரணி தீபமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிது.
தீப தரிசனம்கான 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் கோவில் மாடவீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.
தேரோடும் மாடவீதிகளில் நடைபெற்று வரும் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை முறையாகவும், விரைவாகவும் மேற்கொள்ளவும், இந்த மாதம் 10-ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும் கிரிவலப்பா தையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை யினர் அகற்ற வேண்டும்.
நெடுஞ்சாலை த்துறையினர் அப்புறப்ப டுத்திய பின்னரும் சாலையோர ஆக்கிரமிப்பு செய்யும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரிவலப்பாதையில் கூடுதல் குப்பை தொட்டி களை அமைக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கிரிவலப் பாதையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி, கோட்டாட்சியர் மந்தாகினி, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப்பொ றியாளர் ரகுராமன், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பழனி ராஜூ, செயற்பொ றியாளர் ஜெகநாதன், உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர், உதவி பொறியாளர் ரவி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சரண்யாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், தாசில்தார் சரளா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- கால்வாய் வசதி செய்து தர வலியுறுத்தல்
- ஆரணியில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன்சு ற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டன.
திடீரென மதியம் வேலையில் ஆரணி டவுன் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ந்தது.
இதனால் பங்களா தெருவில் சாலையில் மழைநீருடன் கால்வாய் நீரும் கலந்து சாலையில் ஓடியதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
இது சம்பந்தமாக ஆரணி நகராட்சி நிர்வாகத்திடம் சாலை சீரமைத்தும் கால்வாய் அமைத்து தர கோரி புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலை சீரமைப்பு மற்றும் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கும்பலை பிடிக்க கேமராக்கள் ஆய்வு
- முன் விரோதிகள் குறித்து போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 42), தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் பைக்கில் தீபம் நகர் வழியாக திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது முத்துவை பின் தொடர்ந்து மர்ம கும்பல் கார், 2 பைக்கில் வந்ததாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி போளூர் சாலையில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகில் வந்தபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கி ளில் வந்த மர்ம கும்பல் திடீ ரென முத்துவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்த தாக கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் மர்ம கும்பல் முத்துவையும், ராஜேசையும் அரி வாளால் வெட்ட முயன்ற னர்.
இதில் ராஜேஷ் தப்பி ஓடி ஆவின் பால் குளிரூட்டும் மையத்திற்குள் சென்றார்.
முத் துவை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் அவருக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த முத்துவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பு லன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு முன் விரோதம் காரணமா இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திமுக பிரமுகரை வெட்டி தப்பி ஓடிய கும்பலை பிடிக்க போலீசார் திருவண்ணாமலை சுற்று பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- வயிற்று வலியால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அடுத்த சின்னபுஷ்பகிரி கிராமம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் ( வயது 60), தொழிலாளி.
இவர் கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து, மாத்திரை சாப்பிட்ட பிறகும் கூட நோய் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த பன்னீர்செல்வம் கடந்த 15-ந் தேதி, தனது மாட்டு கொட்டகையில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.