என் மலர்
திருவண்ணாமலை
- வேலூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது
- கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரம்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி மகள் பிரியதர்சினி (வயது 10). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.
காய்ச்சல் குணமாகாத நிலையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் பரிசோதனையில் மாணவிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செம்மியமங்க லம் கிராமத்திற்கு மாணவியின் உடல் கொண்டு செல் லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் அந்த கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்ப ட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
- நவம்பர் மாதம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
வேங்கிக்கால்:
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அக்டோபர் 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும், நீக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக நவம்பர் மாதம் 4,5,18,19 ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களை பயன்படுத்தி விடுபட்ட வாக்காளர் பெயர்களை சேர்த்தல், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிரம்பக் கூடிய புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் கொடுக்க வேண்டும்.
17 வயது நிரம்பியவர்களும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது நிரம்பும் போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி புதிய வாக்காளர்களை சேர்த்தல், இறந்த வாக்காளர்களை நீக்குதல், இடம் பெயர்ந்து தொகுதிக்குள் வந்துள்ள வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்து வெளியில் சென்றுள்ளவர்களை பட்டியலில் இருந்து நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் தி.மு.க. நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பேய் இருக்கா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
- 15 பேர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி தருவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
செங்கம்:
வேப்ப மர உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க.... உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க என்ற பாடல் மூலம் அந்த காலத்திலேயே நமக்கு வீரத்தை ஊட்டினார்கள்.
ஆனாலும் பேய் இருக்கா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
சமீப காலங்களில் பேய் படங்கள் மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு எடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. எந்தவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பேய் நடமாட்டம் என்ற பயம் மனிதனை ஆட்கொண்டே வருகிறது.
திருவண்ணாமலை அருகே விபத்தில் 15 பேர் பரிதாபமாக இறந்த இடத்தில் பேய் நடமாடுவதாக மக்கள் வெளியே வராமல் முடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூரு செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே கடந்த 15-ந் தேதி மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது.
அதில் பயணம் செய்த குழந்தை,பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.
சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 15 பேர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி தருவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.
இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை கடந்து தான் குடிமகன்கள் டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும்.
மேலும் அதன் அருகே 3 தாபா ஓட்டல்கள் உள்ளன. தற்போது பேய் பீதியால் டாஸ்மாக் கடைகளும் தாபா ஓட்டல்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. பேய் பீதி குறித்து தெரியாத வெளியூர்காரர்கள் மட்டுமே டாஸ்மாக் கடைக்கும் வந்து செல்கின்றனர்.
இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டுகின்றனர். 6 மணிக்கே வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி படித்த இளைஞர்கள் நகைச்சுவையாக கூறி சிரிக்கின்றனர்.
திருவண்ணாமலை பெங்களூரு சாலையில் விபத்து நடந்த பகுதியில் அடர்ந்த காட்டு மரங்கள் உள்ளன. இங்கு வனப் பறவைகள் அதிக அளவில் உள்ளது.
மேலும் நாய்கள் அதிக அளவில் சுற்றிதிரிகின்றன. 6 மணிக்கு மேல் மரங்களில் இருந்து பறவைகள் அதிக அளவில் சத்தம் எழுப்புகின்றன. ஒரு சில பறவைகளின் சத்தம் அலறல் சத்தம் போல இருக்கிறது.
மேலும் காற்றில் மரங்கள் அசைவது பயந்தவர்களுக்கு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது மாலை 5.30 மணிக்கு மேல் கடும் குளிர் வாட்டத் தொடங்கியுள்ளது. பனிமூட்டமும் உள்ளது. நாய்கள் அதிக அளவில் அங்கு நின்று கொண்டு குறைத்தபடி ஊளை இடுகின்றன.
இது ஒருவேளை அச்சத்தை ஏற்படுத்தலாம். வாகனங்களில் செல்லும்போது அதில் உள்ள வெளிச்சம் மரங்களில் பட்டு அந்த நிழல் சாலையின் குறுக்கே மர்ம உருவம் போவது போல தெரியும். இதனால் அச்சமடைந்து வருகின்றனர். மற்றபடி ஆவி நடமாட்டம் உள்ளது என்பதை இந்த நவீன காலத்தில் நம்ப முடியாது.
சம்பவ இடத்தில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் அதிக அளவு மின்விளக்குகளை பொருத்த வேண்டும். சாலையின் நடுவில் ஒளிரும் விளக்குகளை பொருத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- எம்.எல்.ஏ., சேவூர் ராமசந்திரன் ஆய்வு
- அதிகாரிகள் உடனிருந்தனர்
ஆரணி:
ஆரணி அருகே தேவிகாபுரம் ஊராட்சிக்குபட்ட மலையாம்புரடை கிராமத்தில் எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதை ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர் வக்கீல் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் எதிெராலி
- கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருவண்ணாமலை:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதி யில் கிறிஸ்துவ மதவழிபாட்டு கூட்டத்தில் நேற்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து திரு வண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் உத்தரவின் பேரில் நேற்று மாவட்டத்தில் முக்கிய தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும் முக்கிய இந்து கோவில்களிலும் பாது காப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதி காரிகள் கூறுகையில் கேரளா சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய தேவாலயங்களாக கண்டறி யப்பட்ட சுமார் 135 தேவால யங்களுக்கு தலா ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட போலீசார் மூலம் தொடர்ந்து ரோந்து பணி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதுமட்டு மின்றி முக்கிய இந்து கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது என்றனர்.
- அதிகாரிகள், பெற்றோருக்கு அறிவுரைக்கூறி எச்சரித்து அனுப்பினர்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனியார் பயிற்சி மையத்தில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக 1098 எண்ணிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தை நல அலுவலர் உத்தரவின் பேரில் வெம்பாக்கம் வட்டார ஊர்நல அலுவலர் லலிதா தென்கழனி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
மேலும் 17 வயதுடைய சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்றும், 18 வயது பூர்த்தியானதும் திருமணம் செய்து வையுங்கள் என்று சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரைக்கூறி எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து ஊர் நல அலுவலர் லலிதா, மணமகன் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் மீது மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது
- மணல் குவியல்களை பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்தனர்
ஆரணி:
ஆரணியை அடுத்த குன்னத்தூர் ஆற்றுப்படுகை பகுதியில் ஆற்று மணலை விற்பனைக்காக குவித்து வைத்திருப்பதாக ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சிப்பந்திகளுடன் சென்று ஆற்றுப்படுகை பகுதியில் குவித்து வைத்திருந்த மணல் குவியல்களை பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்தனர்.
மேலும் ஆற்றுப்படுகை பகுதிக்கு லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகள் செல்லாதவாறு ஆங்காங்கே பெரிய பள்ளம் தோண்டி தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
- மகளிர் அணி புதிய உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை நகராட்சி 5-வது வார்டில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராமு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரிடம் நகர மன்ற உறுப்பினர் சிவில் சீனிவாசன் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அணி புதிய உறுப்பினர்கள் பட்டியலை வழங்கினார்.
இதில் பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சுனில்குமார், நகர செயலாளர் ஜெ.செல்வம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கதர் சீனு, இளைஞர் அணி நகர செயலாளர் இளஞ்செழியன், பேரவை மாவட்ட தலைவர் இளவழகன், துணைத் தலைவர் ரேடியோ ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் போர் மன்னன் ராஜா, மனோ முருகன், நகர அவைத்தலைவர் பழனி, பர்மா ராஜா, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா? என சோதனை
- அவசரவழி உள்ளதா என பார்வையிட்டனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகரில் திண்டிவனம் சாலை, அவலூர்பேட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளபட்டாசு கடைகளில் கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
பட்டாசு அப்போது கடைகளில் உரிமம் புதுப்பிக்க ப்பட்டுள்ளனவா? பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா? எனவும் ஆய்வு செய்தனர்.
மேலும், தீயணைப்பு எந்திரம், தண்ணீர் பாக்கெட், மணல் பக்கெட், அவசரவழி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? எனவும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது தீயணைப்பு நிலைய இயக்குனர் மதியழகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர் நந்த கோபால், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரவீன் குமார், சுதா கர், கிராம நிர்வாக உதவி யாளர்கள் வெங்கடேசன் உத்ரகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- மது அருந்துவது முகம் சுளிக்க வைக்கிறது
வேங்கிகால்:
திருவண்ணாமலையில் பவுர்ணமி தினங்களில் கிரிவலம் வரும் பக்தர்களை குறிவைத்து போதை கும்பல் பணம் பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காவி உடை, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு சுண்ணாம்பு கட்டிகளை தூளாக்கி தட்டில் வைத்து கிரிவலம் வரும் பக்தர்களின் நெற்றியில் பூசி தட்டில் பணம் போடும் படி வற்புறுத்துகின்றனர்.
இதில் பெண் பக்தர்களின் நெற்றி மற்றும் கழுத்து பகுதியில் இவர்கள் விபூதி போன்ற பொருட்களை திடீரென வழிமறித்து பூசுவதால் பெண்கள் பதறியவாறு விலகி செல்கின்றனர். இந்த போதை கும்பல் பல லட்சம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நடந்து செல்லும் பாதையில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது அந்த வழியாக செல்லும் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அத்துமீறலின் உச்சமாக உள்ளது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் சாமியார்கள் என்ற போர்வையில் பக்தியுடன் கிரிவலம் வலம் பக்தர்களிடம் அத்துமீறி நூதன முறையில் பணம் பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த போதை கும்பலுக்கு இடையில் ஏற்படும் சண்டையால் ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கம்புகளால் தாக்கிக்கொள்ளும் சம்பவம் கிரிவலம் செல்லும் பக்தர்களை பதட்டமடைய செய்கிறது.
ஆன்மீக போர்வையில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போதை கும்பல்களால் கிரிவல பக்தர்களுக்கு ஏதேனும் விபரீதம் நிகழ்வதற்குள் காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு தாலுகா, அனக்காவூர் ஒன்றியம், கீழ் கொளத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாட்டுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்தி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்குள்ள பழங்குடியினர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு வழங்கும் 100 சதவீதம் மானியத்துடன் 32 ஆயிரம் மதிப்பீட்டில் 18 குடும்பங்களுக்கு மாடுகள் வாங்க காசோலை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் திராவிட முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் வழக்கறிஞர் புரிசை சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூர் அருகே காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசீர், இவர் சென்னையில் மரவேலை செய்து வருகிறார். இவரது மனைவி காவியா (வயது 21) இவர்க ளுக்கு 1½ வயதில் பவ்மாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
காவியா கடந்த 6 மாதமாக போளூர் தாலுகா பெரியகரம் அருகே காந்தி நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். ஆசீர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து வந்து செல்வார்.
காவியாவின் தாய் வீட்டில் அவரது அண்ணன் தமிழ்ச் செல்வன், அண்ணி பிரீத்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிந்துபாரதி (2) என்ற மகளும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் காவியா வீட்டின் பின்புறம் காலைக்கடனை முடிக்க சென்றார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பவ்மாஸ்ரீ யும்,சிந்துபாரதியும் காவியாவை தேடிக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்றனர்.
அப்போது அருகே உள்ள தரைமட்ட கிணற்றில் 2 குழந்தைகளும் தவறி விழுந்து விட்டன. இதனை கவனிக்காமல் காவியா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் பிரீத்தி, குழந்தைகள் இருவ ரும் எங்கே? என்று கேட்டார்.
நான் அவர்களை பார்க்கவில்லையே என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் குழந்தைகளை தேடினர். பின்னர் அருகில் உள்ள கிணற்றில் சென்று பார்த்தபோது 2 குழந்தைகளும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பிரீத்தி உடனே கிணற் றில் குதித்து குழந்தைகளை தூக்கமுயற்சித்தபோது முடிய வில்லை. உடனடியாக அவர் கூச்சலிட்டத்தில் அக்கம்பக் கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து குழந் தைகளை மீட்டனர்.
பின்னர் போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தைகள் இறந் துவிட்டன என்று கூறினர். இதைகேட்ட அவர்கள் கதறி அழுதனர்.
அதைத்தொடர்ந்து குழந்தைகளை பிரேத பரிசோத னைக்காக திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.