என் மலர்
திருவண்ணாமலை
- வட மாநிலத்தை சேர்ந்தவர்
- 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
வெம்பாக்கம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது லத்திப் (வயது 25). இவர் திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
அப்போது அங்குள்ள பழைய கட்டிடத்தில் முகமது லத்திப் உட்பட வட மாநில தொழிலாளர்கள் 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென பழைய கட்டிடத்தின் சுவர் முகமது லத்திப்பின் தலையில் விழுந்தது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தூசி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முகமது லத்திப் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது
- 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை:
கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு கடந்த 11-ம் தேதி முதல் வருகிறது.
அணைக்கு கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த தண்ணீரின் அளவு, நேற்று குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதும் குறைக்கப்பட்டுள்ளது.
விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 805 கனஅடி நீர்வரத்து உள்ளது. தென் பெண்ணையாற்றில் தொடர்ந்து மூன்று நாட்களாக விநாடிக்கு 850 கனஅடி திறக் கப்பட்ட தண்ணீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றில் 4-வது நாளாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தால், திருவண்ணாமலை உட்பட 5 மாவட் டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்கிறது.
- சொத்து தகராரில் விபரீதம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குணம் கிராமத்தில் வசிக்கும் ராஜேஸ்வரி, அவருடைய தம்பி ராஜேந்திரன் (வயது 42) ஆகிய இருவருக்கும் வீட்டுமனை தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் ராஜேந்திரன் அக்காள் ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்று கதவை தட்டி உள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்தராஜேந்திரன் பேனாக்கத்தியால் ராஜேஸ்வ ரியின் கை, கழுத்து பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் இது குறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக் குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார்.
- பீரோ உடைத்து துணிகரம்
- ரூ.24 ஆயிரத்தை திருடி சென்றனர்
ஆரணி:
கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சரிதா (வயது 50). இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேத்துப்பட்டில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சரிதா குடும்பத்தோடு சென்றார். சரிதா ஊருக்கு சென்று விட்டதால் உறவினர் பழனி என்பவர் மாடுகளை பராமரித்து வந்தார்.
நேற்று இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி விட்டு சென்றார். இன்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக பழனி சரிதா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதே பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (50). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மதுரையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா மஞ்சுரி.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தண்டபாணி மதுரைக்கு சென்று விட்டதால் மனைவி மற்றும் மகன்கள் வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கீதா மஞ்சூரி மற்றும் மகன்கள் தூங்க சென்றனர்.இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் உள்ளே புகுந்து ரூ.24 ஆயிரத்தை திருடி சென்றனர்.
தண்டபாணிக்கு அருகே சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அதிலும் மர்ம கும்பல் திருட முயன்றனர். அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றனர். இன்று காலை கீதா மஞ்சுரி எழுந்து வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டிலிருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளை யடித்தது தெரிந்தது. அதே பகுதியில் வசிக்கும் பரிமளா என்பவர் வீட்டிலும் மர்ம கும்பல் புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு கொள்ளை போன வீடுகளில் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
- மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்தார்
- போலீசார் உடலை மீட்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வெங்களத்தூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 37). விவசாயி. இவரது மனைவி சரளா (36). செய்யாறு சிப்காட்டில் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர்.
மகேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15 -ந் தேதி மனைவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்தார். பணத்தை வாங்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
வெகு நேரமாகியும் கணவன் வீட்டுக்கு வராததால் சரளா பல்வேறு இடங்களில் தேடினார். அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் மகேந்திரன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் பிரம்மதேசம் போலீசாருக்கும், செய்யாறு தீயணைப்பு த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மது போதையில் கிணற்றில் தவறி விழுந்து மகேந்திரன் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவண்ணாமலை கிரிவல பாதையில் கட்டப்பட்டுள்ளது
- ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்
வேங்கிகால்:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கட்டப்பட்டுள்ள அருணகிரிநாதர் மணி மண்டபம் திறப்பு விழா வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்குகிறார்.மணிமண்ட விழாக்குழு தலைவர் மா.சின்ராஜ் வரவேற்கிறார். செயலாளர் அமரேசன் விளக்க உரையாற்றுகிறார்.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்கிறார்.
அருணகிரிநாதர் மணி மண்டபத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பேசுகிறார்.
அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலை யத்துறை கமிஷ்னர் முரளிதரன், கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல திறன் மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, எஸ்.அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன், வெற்றித் தமிழர் பேரவை தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, எஸ்கேபி கல்விக்குழும தலைவர் கு.கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ மணிவர்மா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை கமிஷ்னர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மீனாட்சி சுந்தரம் மற்றும் அருணகிரிநாதர் மணி மண்டப விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இராஜன்தாங்கல் ஊராட்சி தலவாய்குளம் பகுதியில் அ.தி.மு.க.வின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பாஷ்யம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் கீழ்பென்னாத்தூர் (வடக்கு) தொப்பளான், துரிஞ்சா புரம் ஜெயபிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி கண்ணன், நகர செயலா ளர்கள் வேட்டவலம் செல்வ மணி, கீழ்பென்னா த்தூர் முருகன், ஒன்றிய, பொருளாளர் இளங்கோ வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தொகுதி செயலாளர் தட்சணா மூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ். இரா மச்சந்திரன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ கண்ணன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர் வேடநத்தம் ஏழுமலை, தகவல் தொழில் நுட்ப பிரிவு முகில்வ ண்ணன், ராஜபாண்டியன், பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
- பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
வந்தவாசி:
வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் 50 படுக்கைகளுடன் கொண்ட அவசர சிகிச்சை பிரிவும், முதல் தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவும் அமைய உள்ளது.
இந்த நிலையில் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.5.75 கோடி செலவில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கூடுதல் கட்டிடத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு, சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுகள் அமைய உள்ளது.
ஏற்கனவே ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் அருகிலேயே இந்த புதிய கூடுதல் கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தை எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார். அப்போது கட்டிட வரைபட பணிகளை விரைந்து முடிக்கும்படி வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது நகரமன்றத் தலைவர் எச்.ஜலால், நகராட்சி ஆணையர் எம்.ராணி, பொறியாளர் சரவணன், தி.மு.க. நகரச் செயலாளர் ஆ.தயாளன், நகர்மன்ற துணைத் தலைவர் க.சீனுவாசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ம.கிஷோர்குமார், அன்பரசு, ரிஹானா, சையத்அ ப்துல்கரீம், கோ.மகேந்திரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- புகார்களுக்கு 1098 எண்ணில் அழைக்கலாம்
- ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி டவுனில் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளி கல்வி துறை சார்பில் "குழந்தை திருமணம் இல்லா" உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியை தாமரைசெல்வி தலைமை தாங்கினார். இதில் ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். குழந்தை திருமணம் இல்லா உறுதி மொழியை பள்ளி மாணவிகள் எடுத்து கொண்டனர்.
இது தொடர்பான புகார்களுக்கு 1098 எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என மாணவிகளுக்கு அறிவுரை களை வழங்கினர்.
- கட்சி வெற்றிக்கு தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பெ.சு.தி சரவணன் எம். எல் ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ரா.ராஜேந்திரன், மாரிமுத்து ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் வி.பி.அண்ணாமலை வரவேற்று பேசினார்.
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் இசை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டார். சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிற 21 மற்றும் 22-ந்தேதிகளில் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
மாவட்ட எல்லையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களாக உள்ளவர்கள் பொதுமக்களிடம் சென்று, 6-வது முறையாக தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள தி.மு.க. ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என எடுத்துரைக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் நமது வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் களப்பணி ஆற்றிட வேண்டும்.
கட்சி தொண்டர்கள் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும். இன்றைக்கு பெண்களுக்கான ஆட்சி நடந்து வருகிறது. பெண்கள் அதிக அளவில் வரும் தேர்தலில் வாக்களிக்க நமது கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், ஒன்றிய குழு தலைவர்கள் அய்யாக்கண்ணு, தமயந்தி ஏழுமலை, பேரூராட்சி செயலாளர் வேட்டவலம் முருகையன் கீழ்பென்னாத்தூர் அன்பு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் அன்பு நன்றி கூறினார்.
- ஆண்கள் சட்டையை தீயிட்டு கொளுத்தினால் திருஷ்டி கழிந்து விடும் என்று வதந்தியை பரப்பி உள்ளனர்.
- ஒருவரை பார்த்து ஒருவர் என பல வீடுகளில் ஆண் குழந்தைகளின் துணிகள் எரிக்கப்பட்டன.
செய்யாறு:
செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் இந்த முறை புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சரியாக தெரியவில்லை. நேரத்தில் பிறக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண் குழந்தைக்கு நோய் நொடி ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் ஆண்கள் சட்டையை தீயிட்டு கொளுத்தினால் திருஷ்டி கழிந்து விடும் என்று வதந்தியை பரப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆண் குழந்தைகள் அணிந்திருந்த துணிகளை வீட்டின் வாசல் முன்பு போட்டு நள்ளிரவில் தீயிட்டு கொளுத்தினர்.
ஒருவரை பார்த்து ஒருவர் என பல வீடுகளில் ஆண் குழந்தைகளின் துணிகள் எரிக்கப்பட்டன.
மகாளய அமாவாசை சரியான நேரத்தில் வராததால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பழைய துணிகளை தீயிட்டுக் கொளுத்தி திருஷ்டி கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மனைவி காவியா(32) திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- பிரேத பரிசோதனை முடிந்ததும் இறந்தவர்களின் உடல்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள தும்கூர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 60), மலர் (55), மணிகண்டன் (40), ஹேமந்த் (35), சதீஷ்குமார் (40), சர்வேஸ்வரன் (6), சித்து (3) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மனைவி காவியா(32) திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்தவர்கள் உடல்கள் அனைத்தும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்ததும் இறந்தவர்களின் உடல்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ, நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து 7 பேரின் உடல்கள் அரசு மரியாதையுடன் தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.