என் மலர்
திருவண்ணாமலை
- புதைத்த 2 பேர் கைது
- வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கல்வாசல் கிராமம், கொல்லைமேடு பகுதியை ேசர்ந்தவர் சம்பத். தனது விவசாய நிலத்தை சுற்றி கம்பி அமைத்து திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்தார்.
இதில் அங்கு மேய்ச்சலுக்கு வந்த காட்டு மாடு ஒன்று சிக்கி மின்வேலியில் சிக்கி இறந்தது.இதை மறைத்து கேளூர் கிராமத்தைச் சார்ந்த ராஜ்கமல் என்பவர் மூலம் பொக்லைன் எந்திரம் கொண்டு மாட்டை புதைத்து விட்டார்.
இதுபற்றி தகவறிந்த வனத்துறையினர் புதைக்கப்பட்டிருந்த காட்டு மாடு உடலை தோண்டி எடுக்கப்பட்டு அரசு கால்நடை உதவி மருத்துவர், மூலம் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது.
மின்சாரம் தாக்கி இறந்த காட்டு மாட்டை புதைத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து் சம்பத், ராஜ்கமல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் குற்றத்துக்காக பயன்படுத்திய பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஒப்பந்ததாரர் போலீசில் புகார்
- கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
போளூர்:
போளூர் அடுத்த அலங்கார மங்கலம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சேர்த்து பொதுவாக ஒரு இடத்தில் கொட்டுவதற்காக 15 -வது நிதி குழுவின் திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிக்கு அருகில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க ப்பட்டது.
அலங்காரம் மங்கலம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் திடக்கழிவு அமைக்கப்பட்ட இடத்தில் கொட்டுவது வழக்கம்.
அதே பகுதியை சேர்ந்த ஒருவர் குப்பைகளை இங்கே கொட்ட கூடாது, என்று தூய்மை பணியா ளர்களை தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக வந்து கடப்பாரை, மண்வெட்டி யால் திடக்கழிவு மேலாண்மைக்காக அமைக்கப்பட்டிருந்த தொட்டியை அகற்றி உள்ளனர்.
இன்று காலையில் சேகரிக்கப்பட்ட குப்பை களை கொட்டு வதற்காக தூய்மை பணியாளர்கள் அந்தப் பகுதிக்கு சென்றனர்.
அப்போது திடக்கழிவு தொட்டிகளை இடித்து தள்ளப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ஒப்பந்த தாரர் முனுசாமி என்பவர் போளூர் போலீசில் புகார் அளித்தார். மேலும் பொதுமக்கள் திடக் கழிவு மேலாண்மையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- 843 பேர் மனு அளித்தனர்
- உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.
கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்டவைகளை கேட்டு 843 பேர் மனு அளித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதேபோல் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் 78 மனுக்களும், ஆரணி சப் -கலெக்டர் அலுவலகத்தில் 79 மனுக்களும் பெறப்பட்டன.
இதில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கதவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 55). இவர் செய்யாறு பகுதியில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி அமுதா(46). இந்த நிலையில் வெங்கடேசன் வேலைக்காக செய்யாறுக்கு சென்று விட்டார். வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
காலையில் அமுதா எழுந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 14-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கான அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
போட்டியில் 13 வயது முதல் 17 வயது உள்ளவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இதில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு பரிசாக தலா ரூ.1000 வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பிறப்பு சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
போட்டி குறித்து கூடுதல் தகவல்களை பெற 04175 233169 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
- திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வலியுறுத்தல்
- 70-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் வி.ஏ.கே.நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி உமாராணி.
தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். உமாராணி ஆரணி அடுத்த எஸ். வி. நகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் தமிழ் மீது அதிகளவு பற்று கொண்டவர். கொரோனா காலத்தில் வீட்டில் ஓய்வு நேரத்தில் இருந்த போது கவிதை மற்றும் நூல்கள் எழுதி உள்ளார்.
இதனை தொடர்ந்து திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரி புதிய முயற்சியாக சோயாபீன்ஸ், அகல்விளக்கு கை வளையல், கழுத்தில் அணியும் மணி ரூபாய் நாணயம் மற்றும் குடைகளில் தேசிய கொடி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1,330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.
ஆல் இண்டியா புக்ஸ் ஆப் ரெக்கார்டு மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது நல்லாசிரியர் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ் ஆசிரியை உமாராணி பெற்றுள்ளார். மேலும் சாதனைகளை புரிந்த உமாராணியை பாண்டிச்சேரி கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் நேரில் அழைத்து கவுரவித்து பாராட்டினார்.
இதே போல அரசு பள்ளி மாணவ மாணவிகளை தமிழ் ஆசிரியை உமாராணி புதிய முயற்சி மேற்கொண்டு சாதனை புரிய முயற்சி செய்து வருகின்றார்.
- சக்கரபாணி கடந்த ஆண்டு 12 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் அறுவடை செய்தார்.
- பயிரிட்ட செலவு கூட தனக்கு கிடைக்கவில்லை என சக்கரபாணி கூறினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வழூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 12 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வந்தார். அதனை அறுவடை செய்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரவை எந்திரம் வேலை செய்யாத காரணத்தால் சர்க்கரை ஆலை மூடப்பட்டதாக தெரிகிறது. இதனால் செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஆலைக்கு கரும்பு பயிர் செய்த விவசாயிகள் கரும்பை அறுவடை செய்து அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
சக்கரபாணி கடந்த ஆண்டும் 12 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் அறுவடை செய்தார். அப்போது செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் செஞ்சியில் உள்ள கரும்பு சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று நிர்வாகம் கூறியதால் கூலி ஆட்களை வைத்து கரும்பை வெட்டி அனுப்பினார். அப்போது பயிரிட்ட செலவு கூட தனக்கு கிடைக்கவில்லை என சக்கரபாணி கூறினார்.
பின்னர் அவர் மீண்டும் கரும்பு பயிரிட்டார். அந்த பயிர் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. ஆனால் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்னும் அரவை தொடங்கவில்லை. இதனால் கரும்பை வெட்டி செஞ்சியில் உள்ள ஆலைக்கு அனுப்பினால் நஷ்டம் ஏற்படும். எனவே, கரும்பு பயிரை அழிக்க அவர் முடிவு செய்தார்.
அதன்படி விவசாயம் செய்த கரும்பை டிராக்டர் மூலம் அவர் அழித்து விட்டார். தனக்கு ஆலைக்கு ஆட்களை வைத்து கரும்புவெட்டி அனுப்பினால் நஷ்டம் ஏற்படும் எனவும் இதனால் கரும்பு பயிர்களை வயலிலேயே அழித்து விட்டார்.
- கால்நடை மருத்துவர்கள் கன்றுகுட்டிகளை பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர்.
- விழாவில் மாடு முட்டி காயம் அடைந்தவர்களை, அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
கலசப்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் முதலாம் ஆண்டு கன்று விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான கன்று குட்டிகள் கலந்து கொண்டன.
மாடுகளை அதன் உரிமையாளர்கள் வண்ண வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர். காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலை நடுவே மண் மற்றும் தேங்காய் நார் கொட்டப்பட்டிருந்தது. விழா தொடங்குவதற்கு முன்னதாக கன்று குட்டிகளுக்கு வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கால்நடை மருத்துவர்கள் கன்றுகுட்டிகளை பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். இதனை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப் பாய்ந்து ஓடிய கன்றுகுட்டிகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.
விழாவில் மாடு முட்டி காயம் அடைந்தவர்களை, அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற கன்றுகுட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், கடைசி பரிசு ரூ.2 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. இதில் துள்ளி குதித்து ஓடிய 2 கன்றுக்குட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக, அவைகளுக்கு சிறப்பு பரிசாக 1 பெட்டி பீர் பாட்டில்கள், 2 புல் மது பாட்டில்கள் மற்றும் நாட்டுக்கோழி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதனை பெற்றுக்கொண்ட கன்றுக்குட்டியின் உரிமையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
- அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடந்த மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- திருவண்ணாமலைக்கு 21-ந் தேதி வருகை தருகிறார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை-திருக் கோவிலூர் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார்.
துணை சபாநாயகர் கு.பிச் சாண்டி முன்னிலை வகித் தார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் வரவேற்றுப் பேசினார்.
செயற்குழு கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சரும், மாவட்ட தி.மு.க.செயலாளருமான எ.வ.வேலு கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி சிறப்புரை யாற்றினார்.
கூட்டத்தில் நிறை வேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தி.மு.க.தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நமது மாவட்டத்தில் கழக நிகழ்ச் சிகளிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
வடக்கு மண்டல வாக்குச் சாவடி முகவர்கள் கூட் டத்தை திருவண்ணாமலை யில் நடைபெறுவதற்கு வாய்ப்பு வழங்கிட்ட தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்ச ருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள் வது, திருவண்ணாமலையில் நடைபெறும் வடக்கு மண் டல வாக்குச்சாவடி முகவர் கள் கூட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையிலும், அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச் சிகளிலும் எழுச்சியான வர வேற்பு அளித்திட மாவட்ட கழகம் தீர்மானிக்கிறது.
வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் எழுச்சி யாகவும், சிறப்பாகவும் நடத்திட, இந்த மாவட்ட கழகம் ஒரு மனதாக தீர்மானிக்கிறது.
இக்கூட்டத்தில் நமது மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் அனை வரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டுமென தீர்மானிக்கிறது.
புதிய வாக்காளர் சேர்ப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவது நமது மாவட்டத்தில் அனைத்து விதமான கூட்டு றவு சங்கங்களுக்கும் விரை வில் தேர்தல் நடைபெறவுள் ளது. எனவே கூட்டுறவு சங் கங்களில், உரிய சான்றுகளை வழங்கி கழகத்தின் சார்பில் அதிக உறுப்பினர்களை சேர்த்திட மாவட்ட கழகம் கேட் டுக்கொள்கிறது.
மகளிரணி மாநாடு
வருகிற 14-ந் தேதி (சனிக்கி ழமை) சென்னையில் நடை பெறும், தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் தமிழ்நாடு அரசு பெண்களுக்கான அரசு என வியக்கும் அளவிற்கு, நமது மாவட்டத்தில் சார்பில் ஆயி ரக்கணக்கான மகளிர் கலந்து கொண்டு, மா நாட்டினை வெற்றியடைய செய்ய வேண் டும் என்பன உள்பட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில் நாடாளுமன் றத் தேர்தல் பொறுப்பாளர் கள் தி.அ.முகமது சகி. தி.மு.க.மருத்துவரணிதுணை தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன், ஐ.கென்னடி, மணி மாறன், முனிவேல், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர்கள் .பெ.கிரி, எஸ்.அம்பேத்கு மு. மார், பெ.சு.தி.சரவணன், ஒ ஜோதி,
மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர் செல்வம், மாவட்டதுணைசெயலாளர் கள் பிரியா ப.விஜயரங்கன், மாநில தொ.மு.ச. பேரவைச் செயலாளர் க.சவுந்தர ராசன், சிவ.ஜெயராஜ், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன்,
வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் க.லோகநா தன், ஜெயராணிரவி, மாவட்ட பொருளாளர் டி.ஏ.தட்சணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவா சன், அமைப்பாளர்கள் டி. வி.எம்.நேரு, ஜெ.மெய்கண் டன், இரா.கார்த்திகேயன், பிரவீன்ஸ்ரீதரன் ஏ.ஏ.ஆறுமு கம், விஜி என்ற எஸ்.விஜய ராஜ், சி.ராம்காந்த், பச்சையம் மன் எஸ்.முத்து, கோ.எதி ரொலி மணியன், ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர் செல்வம், சி.சுந்தரபாண்டி யன், மெய்யூர்.சந்திரன், பெ.கோவிந்தன், சி.சுந்தர பாண்டியன், த.ரமணன் ஆராஞ்சி ஆறுமுகம், கோ. ரமேஷ், சி.மாரிமுத்து உள்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ந.பாண் டுரங்கன் நன்றி கூறினார்.
- மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையை அணுக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
- கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
புதுப்பாளையம்:
செங்கம் அருகே உள்ள கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு காரப்பட்டு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை யிடமாகக் கொண்டு புதுப்பாளையம் மருத்துவ வட்டம் செயல்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் இரவு மட்டும் அல்லாமல் பகல் நேரங்களிலேயே கொசு தொல்லை அதிகரித்துள்ள தாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கொசு தொல்லையால் பள்ளி மாணவர்கள் முதியவர்கள் பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் காய்ச்சல் உள்ளிட்டவை களால் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
டெங்கு, மலேரியா உள்பட காய்ச்சல்கள் பரவி வருவதை தவிர்க்க புதுப்பா ளையம், காஞ்சி, காரப்பட்டு, வீரானந்தல், முன்னூர்ம ங்கலம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். மருத்துவ வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளிலும்
கொசு மருந்து அடிக்க வேண்டும் எனவும் காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் வருவதை தடுக்க வேண்டும்.
மேலும் பள்ளி மாண வர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவம னையை அணுக விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதிமக்கள், சமூக ஆர்வலர்கள் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடியாத்தத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
- விபத்து ஏற்படுத்திச் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்
வாணாபுரம்:
திருவண்ணாமலை அடுத்த ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் பவுன் குமார். இவரது மனைவி எழிலரசி (28). மகன்கள் ரோஹித் (5), வர்ஜித் (3). இவர்களது உறவினரான குடியாத்தத்தை சேர்ந்த குழந்தை தர்ஷன் (7).
இந்த நிலையில் எழிலரசி உள்பட 3 குழந்தைகளும் மொபட்டில் வேலை சம்பந்தமாக நேற்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். தென்மாத்தூர் தனியார் கல்லூரி அருகே வரும்போது எதிரே வந்த கார் எழிலரசி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு எழிலரசி மற்றும் 3 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குழந்தை வர்ஜித் பரிதா பமாக இறந்தான். மற்றவ ர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வெறையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வர்ஜீத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த விபத்து ஏற்படுத்திச் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கொலையா? போலீசார் விசாரணை
- கழுத்தில் பச்சை துண்டு அணிந்திருந்தார்
வாணாபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் ஊராட்சிக்குட்பட்ட பூ மலைகாடு வனப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியில் விறகு வெட்ட சென்றவர்கள் வாணாபுரம் போலீசுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று வனப்பகுதியில் உள்ள உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எதற்காக வனப்பகுதிக்கு வந்தார்? வனவிலங்குகளை வேட்டையாட வந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவர் ட்ரவுசர், டிசர்ட் அணிந்திருந்தார். அவர் வைத்திருந்த பையில் செல் போன், தலையில் பொருத்தும் சிறிய ரக லைட் மற்றும் கழுத்தில் பச்சை துண்டு அணிந்திருந்தார்.
இதனால் அவர் முயல் வேட்டைக்கு சென்ற போது, உடன் வந்தவர் களுடன் தகராறு ஏற் பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என் பது உள்ளிட்ட கோணங்க ளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரி சோதனை அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத் தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.