என் மலர்
திருவண்ணாமலை
- மாணவர்களுக்கு அழைப்பு
- கலெக்டர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் வருகிற 7-ந்தேதி காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள்மற்றும் பொதுமக்கள் இன்று முதல் 7 -ந்தேதி காலை போட்டி தொடங்குவதற்குமுன்பு வரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிறப்பு சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து அதே அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். குறித்த நேரத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிமுதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்குகாஞ்சி ரோடு சந்திப்பு முதல் அவலூர்பேட்டை ரோடு பிரிவு வழியாக விளையாட்டு அரங்கம் வரையிலும், 25 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் முதல் (அவலூர்பேட்டை ரோடு பிரிவு) மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும்போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். 4 முதல் 10 ஆம் இடம் வரை பிடிக்கும் வீரர்களுக்கு தலா ரூ.1000 பரிசாக வழங்கப்படும்.
போட்டிகள் குறித்து கூடுதல் விவரங்களை பெற 74017 03484 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
- வருகிற 7-ந்தேதி நடக்கிறது
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க.செயற் குழுக்கூட்டம் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால் தலைமை வகிக்கிறார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அ.ராஜேந் திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் வருகிற 21,22-ந் தேதிகளில், தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை வருகை குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி குழுவின் அலைபேசி எண்களை முறைப்படுத்துதல், கூட்டுறவு சங்கத்தேர்த லுக்கான புதிய உறுப்பினர் சேர்த்தல், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், சென்னை மகளிர் அணி மாநாடு மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
இதில் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். எனவே மாநில அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- வந்தவாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராமன் (வயது 38). கட்டிட ஒப்பந்ததார ராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பவானி, இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இவர் வந்தவாசியில் இருந்து கீழ் சாத்த மங்கலம் கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி- சேத்துப்பட்டு சாலையில் இந்திரா நகர் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர், இவரது மோட் டார்சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரகுராமன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து குறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது
- பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சியில் நவீன வசதிகளுடன் கூடிய காரியமேடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் காரிய மேடை அமைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், தமது சொந்த செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6,66,700 வரைவோலையாக வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செ.கணேஷிடம் வழங்கினார்.
மேலும் கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சுவர் ரூ.2.66 மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்ட ரூ.66 ஆயிரம் மதிப்பில் டிடி யும் வழங்கப்பட்டது என பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தெரிவித்தார்.
அப்போது உதவி செயற்பொறியாளர்கள் வேலூர் அம்சா, திருவண்ணாமலை செங்குட்டுவன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் ஷபிலால், துணை தலைவர் வி.குமார் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
- பூதநாராயண பெருமாள் கோவில் முதல் காந்தி சிலை வரை அமைக்கப்படுகிறது
- முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்டதால் பாதசாரிகள் அவதி
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
முதற்கட்டமாக மேல மாடவீதி பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முதல் பெரிய தெரு வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக சென்று வந்த பொதுமக்கள் தற்போது கீழ மாடவீதியான திருவூடல் தெரு, தேரடி தெரு, சின்ன கடைத்தெரு வழியாக பஸ் நிலையம் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், வட்டார போக்குவரத்துஅலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலமாடவீதி சிமெண்ட் சாலை பணிகள் முடிவடையாத நிலையில் பெரிய தெரு சந்திப்பில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவில் முதல் காந்தி சிலை வரை உள்ள 110 மீட்டர் தூரம் கீழ மாட வீதியில் சாலை அமைக்கும் பணிக்காக நேற்று காலை முதல் சின்ன கடைத்தெரு சாலை அடைக்கப்பட்டது.
இதனால் எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலமாடவீதி சாலைப் பணிகள் தொடங்குவதற்கு முன்னர் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக கலெக்டர் முருகேஷ் அறிவித்தார்.
ஆனால் சின்ன கடைத்தெருவில் சாலை பணிக்காக மூடப்படும் என்ற எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் நேற்று காலை மூடப்பட்டது.
நகரின் முக்கிய போக்குவரத்து சாலையான சின்ன கடைத்தெரு சாலை திடீரென மூடப்பட்டதால் நகரில் பெரும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அடுத்த கட்ட கான்கிரீட் சாலை பணிகளை மேல மாட வீதியில் பணிகள் முடிந்த பிறகு கீழ மாட வீதியில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரிவல பக்தர்கள் சின்ன கடைத்தெரு வழியாகத்தான் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- டாக்டர் எ.வ.ேவ.கம்பன் வழங்கினார்
- அய்யங்குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் தூய்மை அருணை இயக்கம் பல்வேறு தூய்மை பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பின் அமைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இருந்து வருகிறார்.
இந்த அமைப்பின் சார்பில் அண்ணாமலையார் தெப்பல் உற்சவம் நடை பெறும் அய்யங்குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது திருவண்ணா மலை நகரின் தூய்மை பணிக்கு உதவிடும் வகையில் தூய்மை அருணை அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளுக்கும் தலா ஒரு குப்பை சேகரிக்கும் வாகனம் என 40 லட்ச ரூபாய் மதிப்பில் 39 குப்பை சேகரிக்கும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தூய்மை அருணை அமைப்பின் மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் குப்பை சேகரிக்கும் வாகனங்களின் சாவியை தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார்.
நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, தூய்மை அருணை மேற்பார்வை யாளர்கள் இரா.ஸ்ரீதரன், ப.கார்த்தி வேல்மாறன், ப்ரியா விஜயரங்கன், நகர மன்ற துணைத்தலைவர் சு.ராஜாங்கம், குட்டி புகழேந்தி, வக்கீல் சீனிவாசன், ஏ.ஏ.ஆறுமுகம், ஷெரீப், நகர மன்ற உறுப்பினர் கோபி சங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- வாகன தணிக்கையில் சிக்கினார்
- 3 பைக்குகள் பறிமுதல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் அம்மா பாளையம் கூட்டு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆரணி அருகே உள்ள பழங்காமூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், அவர் 3 பைக்குகளை திருடி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 3 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- வருவாய் துறையினர் சோதனையில் சிக்கியது
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் தாசில்தார் மஞ்சுளா தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் வேலூர் திருவண்ணாமலை சாலையில் ஆற்று மணலுடன் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி முயன்றனர்.
ஆனால் வருவாய் துறையினரை பார்த்ததும் டிப்பர் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.
இதைத்தொடர்ந்து 2 யூனிட் ஆற்று மணலை கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மணலுடன் கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் தாசில்தார் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படுகாயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- கொலை சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்.
இவர் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து அந்த நிறுவனத்தின் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் முன் விரோதமா, பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணி முடிந்து தூங்கிக்கொண்டிருந்த காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஏற்பாடுகள் தீவிரம்
- வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடக்கிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த மாத இறுதி வாரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மாநில அளவிலான 3 நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.
அதனை முதல்-அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட உள்ளார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
மேலும், திருவண்ணாம லையில் மண்டல அளவிலான தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுவதற்கான ஆயத்த பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.
இந்த நிலையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி பகுதியில் உள்ள திறந்த வெளி மைதானதத்ல் பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அதை ஒட்டி, விழா நடைபெற உள்ள இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைத்தல், உணவு அரங்கம் உள்ளிட்ட வசதிகளை செய்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின் போது, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், எம்.பி. சி.என். அண்ணா துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவ ணன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செய லாளர் பிரியா விஜயரங் கன், துரை வெங்கட். எம். ஆர். கலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கலேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. மனைவி இந்திரா (வயது 52). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆரணி அடுத்த கீழ்பட்டு பகுதியில் வசிக்கும் தனது தாயாரை பார்ப்பதற்காக இன்று காலை ஆட்டோவில் இந்திரா சென்றார்.
சேத்பட்ரோட்டில் வரும்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ஆட்டோவை திருப்பி உள்ளார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த இந்திரா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
ஆட்டோ டிரைவர் உள்பட உடன் பயணித்த வர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் இந்திரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம்
- ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றதும், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணத்தினால் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ராஜகோபுரம் வழியாக பொது தரிசன பாதையில் செல்லும் பக்தர்களும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டண தரிசன பாதையில் செல்லும் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் சென்ற தரிசன வழியானது கோவிலுக்கு மட்டும் இன்றி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தென் சன்னதி தெரு வரை நீண்டு காணப்பட்டது.
சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.
மேலும் கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவி லில் பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.
இந்த கோவிலில் சிறிய இடுக்கு போன்று உள்ள பாதை வழியாக படுத்தவாறு சென்று வெளியேறி அருகில் உள்ள விநாயகரை தரிசனம் செய்வார்கள்.
இதற்காக நேற்று இடுக்கு பிள்ளையார் கோவில் அருகிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று இடுக்கு பிள்ளையாரை வழி பட்டனர்.