என் மலர்
திருவண்ணாமலை
- ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
- ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலூர் கோட்டத்தில் 130 பஸ்கள் இயக்கப்பட்டது.
திருப்பத்தூரில் 30 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூரில் இருந்து 140 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல பவுர்ணமியொட்டி கலசப்பாக்கம் அடுத்துள்ள பருவதமலையில் இன்று காலை முதலே பக்தர்கள் மலை மீது ஏரி தரிசனம் செய்தனர். குடும்பத்துடன் கிரிவலம் சென்றனர்.
- நிலத்தில் மாடு ஓட்டி வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சின்னப்பன் (வயது 86), முன்னாள் ராணுவ வீரர்.
இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான பரசுராமன் என்பவர் மாடுகள் ஓட்டி வந்தார்.
இதனை தட்டிக்கேட்ட சின்னப்பனை பரசுராமன் ஆபாசமாக திட்டி எட்டி உதைத்தும், கொம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.
இதுகுறித்து சின்னப்பனின் மகன் தஞ்சான் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து, பரசுராமனை கைது செய்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.2.17 லட்சம் வசூல்
- 217 கிராம் தங்கம், வெள்ளி 317 கிராமும் செலுத்தியிருந்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்ஷன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் சிவலிங்கம், கண்காணிப்பாளர் ஆறுமுகம், செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் கோயில் மேலாளர் மகாதேவன், எழுத்தர் சீனிவாசன், படவேடு இந்தியன் வங்கி உதவி மேலாளர் ராஜா, உள்பட 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு உண்டியல் எண்ணும் பணியை செய்தனர்.
இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.2,17,604-ம், 217கிராம் தங்கம், வெள்ளி 317 கிராமும் செலுத்தியிருந்தனர்.
- பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
- இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 6 பிரகாரங்கள் மற்றும் 9 பெரிய கோபுரங்கள் உள்ளன.
இக்கோவில் பல்லவர்கள் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்த சதாசிவர் சிலையின் ஒரு பகுதி நேற்று காலை உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோபுரத்தில் இருந்து உடைந்து விழுந்த சிலை அறநிலையத்துறை பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு விரைவில் சீரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
- விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
- ஏராமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பாலகுமார், மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி வளாகத்தில் மூலிகைத்தோட்டம், பல்வகைத் தோட்டங்களை கண்டு பாராட்டினர். முன்னதாக தலைமையாசிரியைதாமரைச்செல்வி வரவேற்றார்.
அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் க.பிரபாகரன், தற்காலிக ஆசிரியர்கள் சசிகலா, நளினி, மகேஷ்வரி, வனிதா, ஆசிரியைகள் பவானி, தமிழ்ச்செல்வி மாணவ, மாணவிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமம், வேடியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது50). இவர் நேற்று இரவு திருவண்ணா மலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலியப்பட்டு கூட்ரோடு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ரத்தினம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் கோனாரின் ராயன் குளக்கரை ஒட்டி உள்ள கிடங்கு தெரு பகு தியை சேர்ந்தவர் முத்து (வயது 25.
இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள புளிரம்பாக் கம் ஏரியில் நண்பருடன் மீன் பிடிக்க சென்றார். அப்போது ஏரி நீரில் இறங்கினார். சிறிது தூரம் சென்ற அவர் கால் தவறி சேற்றில் சிக்கி மூழ்கினார். இதுகுறித்து அவரது நண்பர் செய்யாறு தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். சேற்றில் சிக்கிய முத்துவை சுமார் 2 மணி நேரமாக தேடினர்.
இருள் சூழ்ந்ததாலும் போதியம் வெளிச்சம் இல்லாததாலும் தேடும் பணி கைவிடப்பட்டது.
மீண்டும் இன்று காலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்குப் பிறகு முத்துவை பிணமாக மீட்டனர்.
இது குறித்து செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துவின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும்
- சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது சிறுவர்களை அதிகம் தாக்கியுள்ளது.
இதனால், செங்கம் மருத்துவமனை மற்றும் உள்ள சிறுவர்களின் ரத்த மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு செங்கம் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சால் பாதிக்கப்ப ட்டவர்கள் அதிகரித்துள்ளது.
காய்ச்சலின் வருவது தன்மை தீவிரமாக உள்ளதால் பெற்றோர் அச்சமடை ந்துள்ளனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. மேலும், கழிவுநீர் கால்வாய்களும் பல இடங்களில் தூர்ந்து கிடப்பதால், மழைநீருடன் கழிவு நீரும் சாலையில் தேங்கி விடுகிறது.
இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலும் அதிகரித்த வண்ணம் உள்ள தால், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- சீரமைப்பு பணிகள் நடைபெற்றது
- புனித நீர் அபிஷேகத்துடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் உள்ள சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலில் நன்கொடையாளர் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பில் தரைக்கு டைல்ஸ், கேட் ஆகிய சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
இதையடுத்து நேற்று காலை கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் கோவில் விழாக்குழு தலைவர் கே.டி. குமார், ஓய்வு கண்டக்டர் சேகர், ஏழுமலை, பேருராட்சி வார்டு உறுப்பினர்கள் மணி விஜய் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அம்மனுக்கு புனித நீர் அபிஷேகத்துடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
- கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
- ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் அமைந்துள்ள பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது.
விழாவிற்கு கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து முன்னிலை வகித்தார். வேலூர் மண்டல மேலாளர் நாகராஜன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலெக்டர் பா.முருகேஷ் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.
கோ ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டில் சுமார் 174.10 கோடிக்கு விற்பனை இலக்கை எட்டியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு ட்வில் வீவ் ஆயத்த ஆடைகள், காம்பிரே ஆயத்த ஆடைகள், ஸ்லவ் காட்டன் சட்டைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் கலெக்சன் போர்வைகள், காம்பிரே போர்வைகள் ஆகியவை புதிய வரவுகளாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 91 லட்ச ரூபாய் விற்பனை செய்த பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
56 சதவீதம் கூடுதல் பலன் கிடைப்பதால் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அரசு ஊழியர்கள் 30 சதவிகித தள்ளுபடியில் வட்டியில்லா கடன் வசதியை பெற்று பயன்பெறலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்படும் என கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து தெரிவித்தார்.
இதில் விற்பனை மேலாளர் தணிகைவேலு, குமரவேல், நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.
மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது
- கலசபாக்கத்தில் 75.40 மி.மீ மழை பதிவாகியது
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. செங்கம் மற்றும் அதன் அருகே உள்ள ஜமுனாமரத்தூர் மலை மற்றும் அடிவாரப் பகுதிகள் உள்பட செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை பெய்தது.
இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக செங்கம் - ஜவ்வாதுமலை தொடரில் உருவாகி செங்கத்தை ஒட்டி செல்லும் செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதில் திருவண்ணாமலையில் 96 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 38.20, போரூரில் 18.80, ஜமுனாமரத்தூரில் 20, கலசபாக்கத்தில் 75.40, தண்டராம்பட்டில் 15.60, ஆரணியில் 18.60, செய்யாறில் 35, வந்தவாசியில் 32, கீழ்பெண்ணாத்தூரில் 33.20, வெம்பாக்கத்தில் 35, சேத்துப்பட்டு 72.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.