என் மலர்
திருவண்ணாமலை
- பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே கன்னிகாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் கந்தசாமி (54).நேற்று 13ம்தேதி காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
அப்போது திருவண்ணாமலை செல்லும் ரோட்டில் பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்ரோடில் சாலையோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து,கந்தசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது சம்பந்தமாக தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கந்தசாமி பிணத்தை பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசில் அ.தி.மு.க.வினர் புகார்
- கட்சி சின்னம் கொடி பயன்படுத்த கூடாது என தீர்ப்பு
ஆரணி:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஓ.பி.எஸ். அணியினர் ஆரணியில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலம் செல்வதாக அ.தி.மு.க. கட்சி கொடி மற்றும் சின்னத்தை கொண்டு ஆரணி நகர முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஆரணி அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமசந்திரன் தலை மையில் ஆரணி டவுன் போலீசில் நகர செயலாளர் அசோக்குமார் புகார் கொடுத்த கூறியதாவது:-
ஓ.பி.எஸ். அணியினர் கட்சியை விட்டு நீக்கியது செல்லும் எனவும் இனிமேல் கட்சி சின்னம் கொடி பயன்படுத்த கூடாது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளன.
ஆனால் ஒ.பி.எஸ் அணியினர் தவறாக அ.தி.மு.க. என குறிப்பிட்டு போஸ்டர்கள் அச்சடி க்கபட்டு நகர் முழுதும் சுவரொட்டிகளில் ஒட்டியுள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியும் இனி பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கும் மாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் ஒன்றிய செயலா ளர்கள் வக்கீல் சங்கர் ஜெயபிரகாஷ் , மாவட்ட ஐ.டி விங் செயலாளர் சரவணன், வக்கீல் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர் மோகன், உள்ளிட்ட அ.தி.மு.க. கட்சியினர் உடன் இருந்தனர்.
- அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
- துறை சார்ந்த அதிகாரிகள் உடனருந்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவமனை கட்டுமான பணிகளை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் கட்டிடம் கட்டும் பணிகளை சீராக செய்யும்படியும், மேலும் செங்கற்களை முழுமையாக தண்ணீரில் நனைத்து கட்டிட வேலையை செய்யும்படியும் அறிவுத்தினார்.
ஆய்வின்போது தெள்ளார் சேர்மன் கமலாச்சி இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன் ராதா சுந்தரேசன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் மற்றும் கால்நடை மருத்துவ துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது
- 2 பெண்களிடம் போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டம் பண்டிதபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 60). இவர்கள் அதே பகுதியில் உள்ள நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இவர்களது நிலத்தில் பக்கத்து நிலத்தை சேர்ந்த 2 பெண்கள் மாடு மேய்த்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட முனியம்மாள் அந்த பெண்களை திட்டியதாக கூறப்படுகிறது.
அந்த பெண்களும் முனியம்மாளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த 2 பெண்களும் முனியம்மாளை சரமாரியாக தாக்கினர்.
இதில் முனியம்மாள் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.
அதிலிருந்த மருத்துவ பணியாளர் முனியம்மாளை பரிசோதித்தார். அப்போது அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து பழனி திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்
செய்யாறு:
செய்யாறு டவுன், ஆரணி கூட்ரோட்டில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், சின்னதுரை, ராம் ரவி, துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
- பழைய ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்்
போளூர்:
தமிழக ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நேரத்தில் நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் பேராட்டத்தில் சார்பில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப கொரோனா காலத்தில் இருந்து சரண்டர் விடுப்பை நிறுத்தி வைத்துள்ளனர். அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்க ளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- இனப்பெருக்கம் செய்யாத அளவிற்கு கருத்தடை செய்ய வேண்டும்
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை,பஜார் சாலை,அச்சரப்பாக்கம் சாலை, சன்னதி தெரு, தெற்கு போலீஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக 30-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் போது அவர்களை துரத்துகின்றது. மேலும் இரவு நேரத்தில் பணிகள் முடிந்து வீட்டுக்கு திரும்பும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாய்களை அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாத அளவிற்கு கருத்தடை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- 2,270 சமையல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்
- பலர் கலந்து கொண்டனர்
ேவங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராம ஊராட்சியில் உள்ள அரசு மாதிரி ஆரம்ப பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தும் முறை குறித்து கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.
மேலும் பள்ளி மாணவர்களுக் கலெக்டர் உணவு பரிமாறினார். தொடர்ந்து பேசிய ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1,581 பள்ளிகளில் படிக்கும் 88 ஆயிரத்து 988 மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.
இதற்காக 2,270 சமையல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார். இதில் மகளிர் திட்ட இயக்குநர் சையித் சுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், பிரித்விராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறு தானிய உணவு குறித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி டவுன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய உணவு குறித்து விழிப்பு ணர்வு பேரணி தலைமை யாசிரியர் வசந்தா தலைமை யில் நடைபெற்றது.
மாணவ, மாணவிகள் உணவு தானிய குறித்து பதாகைகளை ஏந்தியும் தானிய உணவு நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
விழிப்புணர்வு பேரணி காந்தி ரோடு மார்க்கெட் வீதி சத்தியமூர்த்தி சாலை முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வந்தடைந்தன.
இதில் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- 4 மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி
- ஆசிரியர்கள் பாராட்டு
போளூர்:
போளூர் அரசினர் பெண்கள் மேல்நி லைப்பள்ளி மாணவிகள் பூப்பந்தாட்டம், கபடி, மேசைப்பந்து, சதுரங்கம், கேரம், இறகு பந்து, வலைப்பந்து, பீச் வாலிபால் போன்ற விளை யாட்டுகள் நடைபெற்றது.
வட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் 700 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 140 மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவில் தகுதி பெற்றனர்.
நடந்த விளையாட்டு போட்டியில் பூர்விகா, ஸ்வேதா, ஸ்ரீ பிரிதிவி, ஸ்ரீ நிஷா ஆகிய 4 மாணவிகளும் வெற்றி பெற்று மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவி களை தலைமையாசிரியர் சுதா, உதவி தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன் ஜெகன், கஸ்தூரி, உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார், உடற்கல்வி ஆசிரியர் சுமதி சித்ரா ஆகியோர் பாராட்டினர்.
- அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கோவில் மாடவீதியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான நிலையத்திற்கு இணையான கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:-
திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்ட் சாலைகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்.
தற்போது அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஆறு மாத காலமாக அந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறப்பு பேவர் பிளாக் எந்திரத்தின் மூலம் விமான நிலையத்திற்கு இணையான தரத்தில் கான்கிரீட் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்த எந்திரத்தை பயன்படுத்தி திருவண்ணா மலை அண்ணாமலையார் கோவில் மாடவீதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிகளை அக்டோபர் 10-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிட ப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் கான்கிரீட் சிமெண்ட் சாலையில் தேர் தங்குதடையின்றி குறித்த நேரத்தில் மாட வீதியில் வலம் வந்து தனது நிலையை அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ, தொழிலாளர் நல அரசு பிரதிநிதி இரா ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம், நகராட்சி ஆணையாளர் தட்சணா மூர்த்தி, ஒப்பந்ததா ரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், நகரமன்ற உறுப்பினர்கள் சுமதி அருண்குமார், மெட்ராஸ் சுப்பிரமணி, மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- மணிமண்டபம் கட்டுவதற்கான கட்டுமான பணியை இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
- கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து விரைவில் கோவிலுக்கு யானையை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் வலியுத்தினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி அதிகாலையில் கோவில் வளாகத்தில் இறந்தது.
பின்னர் கோவில் அருகிலேயே ருக்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 7 வயதில் கோவிலுக்கு வந்த ருக்கு 23 ஆண்டுகளாக ஆன்மிக பணியை செம்மையாக செய்தது. தனது 30-வது வயதில் மரணம் அடைந்தது.
கோவில் வளாகத்தின் அருகில் யானை ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது.
மணிமண்டபம் கட்டுவதற்கான கட்டுமான பணியை இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் கோவில் இணை ஆணையர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மணியம் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சிவத்தலமான திருவண்ணாமலை கோவிலில் யானை ருக்கு இறந்து 5½ ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை யானை இல்லாத நிலையே உள்ளது.
கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து விரைவில் கோவிலுக்கு யானையை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் வலியுத்தினர்.