என் மலர்
திருவண்ணாமலை
- 10 கிலோ இறைச்சி பறிமுதல்
- ரூ.50 ஆயிரம் ரூபாய் அபராதம்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள சாத்தனூர் வனச்சரகம் ராதாபுரம் கிழக்கு பீட் வீரணம் கிராமம் அருகே வனச்சரக அலுவலர் சீனுவாசன் தலைமை யிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நிலத்தில் கம்பி வேலி அமைத்து காட்டு பன்றியை வேட்டையாடிய மணிகண்டன் மற்றும் பச்சையம்மாள் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் சமைப்பதற்காக பிரிட்ஜில் வைத்திருந்த சுமார் 10 கிலோ காட்டு பன்றியின் இறைச்சியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
- கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குட்பட்ட எத்திராஜ் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 65). இவர் கடந்த ஒரு வருட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மனமுடைந்த சங்கர் அவருடைய மகள் கீதாவிடம் ரூ.1000 வாங்கிக் கொண்டு கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். 2 நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை பையூர் பாறைக்குளத்தில் இறந்த நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியது.
உடனடியாக ஆரணி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் வேண்டுகோள்
- பவுர்ணமியை முன்னிட்டு ஆய்வு கூட்டம் நடந்தது
வேங்கிக்கால்:
ஆவணி மாத பவுர்ணமி நாளை (புதன்கிழமை) காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.05 மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அரசு அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவிலில் பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் இலவசமாக சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்ய வேண்டும்.
கோவில் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு பக்தர்கள் வரிசையில் செல்வதற்கான வழிப்பாதைகளை முறையாக அமைக்க வேண்டும்.
மருத்துவ துறையினர் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவல பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
கிரிவலப் பாதையை நகராட்சி துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை நகராட்சியுடன் இணைந்து சாலை யோர ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். போக்கு வரத்து துறையின் சார்பில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை வசதிகளை அமைத்து தர வேண்டும். காவல் துறையின் மூலமாக கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
துணி பை
பொதுமக்கள், பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். பவுர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கிரிவலம் வரும் பக்தர்கள் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிய தர்ஷினி, அறநிலை யத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சனம் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- 38 மையங்கள் மூலம் 4-ந் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24 சொர்ணவாரி பருவத்தில் முதல் கட்டமாக 11 வட்டங்களில் 38 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 4-ந் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.
திருவண்ணாமலை வட்டத்தில் வெளுக்கா னந்தல், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் சோமாசிபாடி, அணுக்குமலை, உட்பட 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினை அடங்கலில் பெற வேண்டும்.
நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்கு றிப்பிட்ட சான்றுகள், ஆதார். சிட்டா மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று நெல் கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்மந்தப்பட்ட விவசாயியின் தொலைபேசி எண்ணிற்கு" வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது" என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
பதிவு செய்த விண்ண ப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலு வலருக்கு அனுப்பப்பட்டு அவரால், பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் நிராகரிப்பு செய்யப்படும்.
விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம். சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்-அப் வாயிலாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரி செய்யப்படும்.
எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறுமாறு திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.
- குடும்ப தகராரில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைநாதன் (வயது 55). விவசாயி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
மலை நாதனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த மலைநாதன் வீட்டில் யாரும் இல்லாத போது மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீமிதி விழா நன்கொடை வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியைச்சேர்ந்த வீரக்கோவில் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 18-ந்தேதி மகாபாரத சொற்பொழிவுடன் அக்னி வசந்த விழா தொடங்கியது.
இதைமுன்னிட்டு தினமும் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவும் நடக்கிறது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் தீமிதி விழாவிற்கு நன்கொடை வழங்கினார்.
அவருக்கு கோவில் விழாக்குழு சார்பில் நாட்டாமை சரவணன் சால்வை அணிவித்து வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர்.
இதில் படவேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் அன்பழகன், பால்கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சங்கர், முன்னாள் கவுன்சிலர் ரகு, கிளைக் கழக செயலாளர்கள் பொன்பன்னீர், ராமலிங்கம், ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வெந்நீர் வைக்க கியாஸ் பற்றவைத்த போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
போளூர்:
போளூர் அடுத்த ஓகூரை சேர்ந்தவர் பழனி (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (33). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
பழனியின் தாயார் இவர்கள் இருக்கும் வீட்டின் அருகே வசித்து வருகிறார். தாயாரை பழனி அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி தனது தாயாரை பார்ப்பதற்காக சென்றார்.
வெந்நீர் வைப்பதற்காக பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கியாசில் வைத்தார். கியாஸ் கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல் அதனை பற்ற வைத்தார்.
அப்போது திடீரென அவர் மீது தீப்பிடித்தது. அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் தனது மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். பழனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீக்காயம் அடைந்த பழனியை ஆம்புலன்ஸ் மூலம் போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பழனி பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போளூர் போலீசார் பழனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி தனியார் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது.
பஸ்சில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அரசம்பட்டு கூட்ரோடு அருகே வரும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி திடீரென பஸ் மீது மோதியது. இதில் பஸ்சும், கடெய்னர் லாரியும் சேதமானது. பஸ்சில் பயணம் செய்த தேப்பரம்பட்டு கிராமத்தை சேர்ந்த துளசி நாதன் (வயது 64). நாடக நடிகர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் பஸ்சில் படுகாயம் அடைந்து சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழை க்கப்பட்டு படுகாயம் அடைந்த வர்களை சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக துளசி நாதனை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் துளசி நாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சேத்து ப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துளசி நாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் உண்டியல் உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை- வேலூர் சாலையில் தீபம் நகரில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக் கோவில் காலையில் நடை திறப்பதும், மாலையில் நடை சாத்துவதும் வழக்கம். கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர்.
நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவில் கேட்டின் மேலே ஏறி கோவிலுக்குள் குதித்தனர். மேலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர்.
இந்த நிலையில் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கோவில் நிர்வாகி தேவராஜிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி வருகிறது.
- 350 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி (புதன்கிழமை) வருகிறது. 30-ந் தேதி காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பவுர்ணமியையொட்டி வருகிற 30-ந் தேதி சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்தனர்
- துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள திட்டம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 6 மையங்களில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான போட்டி தேர்வு நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் காப்பி அடித்து தேர்வு எழுத முயன்றுள்ளார்.
அப்போது தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளம்பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர்.
இவர் திருவண்ணாமலையில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி ஆவார். இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
அந்த பெண் பிட் வைத்து காப்பியடித்து எழுத முயன்ற போது சிக்கினார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
- எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் கலைபாஸ்கர் தலைமை தாங்கினார். போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதிஅண்ணாமலை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இந்த விழாவில் கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 66 மாணவளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.
இதேபோல் படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை 77 மாணவ மாணவிகளுக்கு கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர் வி சேகர், படவேடு ஆசிரியர் சங்க தலைவர் முருகன், உதவி தலைமை ஆசிரியர் சிங்காரகிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.