என் மலர்
திருவண்ணாமலை
- சைபர் கிரைம் போலீசில் புகார்
- ஜெயிலில் அடைத்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (21) ஆபாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என தன்னை மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையான போலீசார் வசந்தகுமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- திடீரென மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு
- போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
ஆரணி:
ஆரணி அடுத்த பையூர் மில்லர்ஸ் சாலையில் அரசு கார்டன் என்கின்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே அதன் உரிமையாளர் இவர்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்கு பொது வழி உள்ளது.
இந்த நிலையில் 40 குடும்பங்கள் செல்லும் வழியை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். மேலும் அவர் வங்கியில் கடன் திருப்பி செலுத்தாததால் அந்த 40 குடும்பங்கள் செல்லும் வழியை வங்கி ஏலம் விட்டது.
இந்த வங்கியில் சதுப்பேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் ஏலத்திலிருந்து எடுத்து தற்போது அங்கு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்
இதனால் பொது வழி அடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்கள் செல்ல வழி இல்லாத காரணத்தால் ஆரணி தாலுக்கா போலீசாரிடமும் மற்றும் கோட்டாட்சியரிடமும் மனு அளித்தனர்.
அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மில்லர்ஸ் சாலையில் இன்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வந்த ஆரணி இன்ஸ்பெக்டர் ராஜங்கம், எஸ்.ஐ ஷாபூதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் மறியலை கைவிட்டு கலைத்து வைத்தனர். அப்போது குடியிருப்பு பகுதி சேர்ந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாரிகள் விளக்கம்
- 5 சதுர அடி விட்டத்திற்கு வேர்ப் பகுதியில் மேற்கண்ட மருந்தினை ஊற்ற வேண்டும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த கரும்புகளில் வேர் புழு தாக்குதல் காணப்படுகிறது.
இப்புழு தாக்கப்பட்ட கரும்பு பயிரின் வேர்கள் பாதிப்படைந்து குருத்து மற்றும் கரும்பு தூர்கள் வாடிய தோற்றமளிக்கும். கரும்புகள் ஆங்காங்கே திட்டுதிட்டாக காயந்து காணப்படும்.
நோய் பாதித்த கரும்பின் தூர்களை பிடுங்கினால் சுலபமாக வேர்களை விட்டு வெளியே வரும். பாதிக்கப்பட்ட பயிரின் அடியில் மண்ணுள் வெண்ணிறமான வளைந்த உடலுடன் இப்புழுக்கள் தென்படும்.
இதனை கட்டுப்படுத்த இமிடாகுளோர்பிரிட் 17.8 எஸ்.எல். மருந்தினை 1 மில்லி அளவை 1 லிட்டர் நீரில் கலந்து பாதிக்கப்பட்ட கரும்பின் வேர்ப்பகுதியில் நன்கு நனையும் படி ஊற்ற வேண்டும்.
மேலும் சுற்றியுள்ள வளமான கரும்புகளுக்கும் 5 சதுர அடி விட்டத்திற்கு வேர்ப் பகுதியில் மேற்கண்ட மருந்தினை ஊற்ற வேண்டும்.
அதுமட்டுமின்றி ஒரு ஏக்கருக்கு பச்சை பூஞ்சானமான மெட்டாரைசியம் 500 மில்லி லிட்டர் மற்றும் வேப்பம்புண்ணாக்கு 20 கிலோ என்ற அளவில் அல்லது 50 கிலோ மக்கியதூள் செய்யப்பட்ட தொழு உரத்துடன் கலந்து வேர்ப்பகுதியில் தூவி நன்றாக தண்ணீர் விட வேண்டும்.
பாதிக்கப்பட்ட கரும்பின் வேர்ப்பகுதியில் உள்ள வெள்ளைப் புழுக்களை சேகரித்து தீயிட்டு அழிக்க வேண்டும் என செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் காமாட்சி தெரிவித்து உள்ளார்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- மகாபாரத நாடகங்கள் நடைபெற உள்ளது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு மதுரா வீரக்கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 18-ந் தேதி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் அலகு நிறுத்தப்பட்டது.
தினமும் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை தினமும் மேல்பள்ளிப்பட்டு வெ.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகா பாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 25-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை தினமும் கோவிலின் முன்பு போத்துராஜாமங்கலம் குழுவினரின் மகாபாரத நாடகங்கள் நடைபெற உள்ளது.
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
- மின் அதிகாரி தகவல்
கண்ணமங்கலம்:
வேலூர் மாவட்டம் கீழ்பள்ளிப்பட்டு மற்றும் சாத்துமதுரை துணை மின் நிலையங்களில் வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்பள்ளிப்பட்டு, மோத்தக்கல், கொங்கராம்பட்டு, அத்திமலைப்பட்டு, கம்மவான்பேட்டை, நீப்லாம்பட்டு, சலமநத்தம், கீழ்அரசம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி, சாம்கோ உள்ளிட்ட பகுதிகளில் கணியம்பாடி, வேப்பம்பட்டு, ஆவாரம்பாளையம், பென்னாத்தூர், அடுக்கம்பாறை, கட்டுப்படி, துத்திப்பட்டு, இடையஞ்சாத்து உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேற்கண்ட தகவலை வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- கிணற்றின் அருகே செருப்பு இருந்தது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த கீழ் மட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. கூலி தொழிலாளி. இவரது மகள் நிக்கித்தா (வயது 15). இவர் திருவத்திபுரம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நிக்கித்தா சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் வேலு தேடினார். அவர் கிடைக்காததால் பின்னர் நிலத்திற்கு சென்று பார்த்தார்.
அப்போது குடிநீர் கிணற்றின் அருகே நிக்கித்தாவின் செருப்பு இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த வேலு செய்யாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குடிநீர் கிணற்றில் இறங்கி தேடினர். சிறிது நேர தேடுதலுக்கு பின்னர் நிக்கித்தாவை பிணமாக மீட்டு அவரது உடலை மேலே கொண்டு வந்தனர்.
இது குறித்து வேலு அனக்காவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து நிக்கித்தாவின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நிக்கித்தா இறந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினரின் திருமணத்திற்காக சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 55). இவர் தனது நண்பர் நடராஜனுடன் உறவினரின் இல்ல திருமணத்திற்காக ஆரணி-ஆற்காடு சாலையில் வெள்ளேரி கிராமம் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஆரணி தாலுகா சங்கீதவாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தனுசு (17). ஆற்காட்டில் இருந்து ஆரணி நோக்கி பைக்கில் வந்தார். எதிர்பாராத விதமாக நடந்து சென்ற விஜயகுமார் மீது பைக் நேருக்கு நேராக மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- உறவினர்கள் சாலை மறியல்
- கண்டு பிடித்து தர வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரிஆசிரியை. இவர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக பெற் றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது அங்கும் வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக் காததால் ஆசிரியரின் தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.
அதன் போரில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை யாரேனும் கடத்தி சென்றார்களாக என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரி யை யின் உறவினர்கள், போலீசார் நடவடிக் க்கை எடுக்கவில்லை எனக்கூறி திடீரென நேற்று மாலை, வடக்கு காவல் நிலையம் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. கார்த்திக், இன்ஸ்பெக்டர் விசுவநாதன் ஆகியோர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதனை தொடர்ந்து உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குழந்தை காலில் இருந்து கழட்டிய போது சிக்கினார்
- ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் பக்தர்கள் குவிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர். இதில் சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த துரைமுருகன் மனைவி குணசுந்தரி தனது கை குழந்தையுடன் சாமி கும்பிட வந்தார். கோவில் வாசலில் உள்ள கற்பூர அகாண்டம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது பெண் ஒருவர் குழந்தை காலில் போட்டிருந்த கால் கொலுசை திருடி கொண்டிருந்தார். இதனைப் பார்த்த குணசுந்தரி கூச்சலிட்டார்.
அங்கிருந்த பக்தர்கள் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கையும், களவுமாக பிடித்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனார்.
போலீஸ் விசாரணையில் அவர் ராணிப்பேட்டை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அம்சவேணி என்பதும், இவர் குழந்தை காலில் போட்டு இருந்த கால் கொலுசை திருடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அம்சவேணியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- பஸ்சில் ஏற முயன்றபோது துணிகரம்
- பஸ்சில் ஏற முயன்றபோது துணிகரம்
ஆரணி:
ஆரணி அருகே முக்குருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர் சொந்த வேலைக்காக ஆரணிக்கு சென்றார்.
பின்னர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து முக்குருந்தை கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தார். அப்போது அங்கு வந்த பஸ்சில் கூட்ட நெரிசலில் ஏற முயன்றார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாேரா மர்ம நபர் ஒருவர் அவரது பணப்பையை திருடி சென்றார்.
இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைப்பு
- வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆற்றில் மணல் கொள்ளை அதிகம் நடப்பதாக தாசில்தார் மஞ்சுளாவுக்கு புகார் வந்தது. அதன் பேரில் தாசில்தார் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் ஆகாரம் கிராமத்திற்கு உட்பட்ட ஆற்றில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 3 பேரை மடக்கினர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகள் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியுடைய நெசல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் பரசுராமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- யாகபூஜைகளுடன் நடந்தது
- பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கணணமங்கலம் அடுத்த சந்தவாசல் புஷ்பகிரி காட்ரோடு பகுதியில் ராஜகணபதி, மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இதைமுன்னிட்டு நேற்றுமுன்தினம் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் இரவு முதல் கால யாகபூஜைகளும் நடைபெற்றது.
கோபூஜை, தம்பதி சங்கல்பம், 2-ம் கால யாகபூஜைகளுடன், காலை 10.15 மணிஅளவில் மகாகும்பாபிசேக விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.