search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 47 பாட்டிகள், பைக் பறிமுதல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி 5 கண் பாலம் அருகே வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர்.

    இதில் வந்தவாசி திண்டிவனம் சாலையைக் சேர்ந்த தேவேந்திரன் (வயது 47) மது பாட்டில் களை கடத்தியது தெரிய வந்தது.

    அவரை கைது செய்தபோலீசார் 47 மதுபாட்டிகள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது பதுக்கி வைத்திருந்த 120 மது பாட்டில்களை கைப்பற்றினர்.

    பின்னர் தேவேந்திரனின் மனைவி சைதானியை (44) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தேவேந்திரன் இதயநோயாளி என்பதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    • கள்ளச்சந்தை தடுப்பு சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை
    • புகார்கள் 18005995950 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்

    திருவண்ணாமலை:

    செய்யாறு பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவரை ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் செய்யாறு பகுதியில் குமார் பதுங்கி இருப்ப தாக இன்ஸ்பெக்டர் சுதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் ஏட்டுகள் குமார், சுந்தரபாண்டியன், நாகமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று குமாரை கைது செய்தனர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் சுதா கூறுகையில், பொது வினி யோக திட்ட பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்ற மாகும். இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பொது வினியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

    • வந்தவாசியில் நடைபெற்ற போரில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தனர்
    • போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும் பார்வையிட்டனர்

    வந்தவாசி:

    வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வந்தவாசிப் போர் 1760-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி நகரில் இருக்கும் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும்.

    இந்தப் போரில் ஆங்கிலத் தளபதி அயர் கூட் தலைமையிலான படை பிரெஞ்சுச் தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையைத் தோற்கடித்தது.

    இந்தியாவில் வந்தவாசியில் நடைபெற்ற போரில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தனர்.

    இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டை மற்றும் கோட்டை அகழி குதிரை லாயம் மற்றும் போரில் பயன்படுத்திய பீரங்கியை வேலூர் சரக டிஐ.ஜி முத்துசாமி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட போலீசார் சூப்பிரண்டு கார்த்திகேயன் இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தையும் மற்றும் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும் பார்வையிட்டனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    போளூர்:

    போளூர் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அல்லிநகர் எம்ஜிஆர் சிலை அருகில் போளூர் ஆரியன் தெருவை சேர்ந்த பழனி மகன் தினகரன் என்கிற தீனா (வயது 22) காங்கேயனூர் காலணியை சேர்ந்த சரவணன் மகன் சத்திய பிரகாஷ் (22) 2 பேரும் கஞ்சா விற்று கொண்டிருந்தார். அவர்களை கைது செய்த போலீாசர்

    கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி 2 பைக் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதணை நடைபெற்றது
    • பஸ் வசதிகள் செய்யப் பட்டிருந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று ஆடி 5-ம் வெள்ளி விழா நடைபெற்றது.

    இதைமுனனிட்டு அதிகாலை 4 மணியளவில் அம்மனுக்கு கமண்டல நதியில் இருந்து ஜலம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதணை நடைபெற்றது.

    தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் சென்று அம்மன் தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். இவ்விழாவிற்கு வேலூர் ஆரணி போளூர் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப் பட்டிருந்தது.

    மாலையில் ரேணுகாபுரம் ஆர் எம் முருகதாஸ் குழுவினர் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது.

    இரவில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்துடன் அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. ஆவணி மாதம் பிறந்து விட்டநிலையில் பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகள் செயல் அலுவலர் சிவஞானம், உதவி ஆணையர் ஜீவானந்தம், கோவில் அலுவலர்கள் மகாதேவன், சீனிவாசன், மோகன், ரவி, புலவர் சிவகுமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சரமாரியாக தாக்கினர்
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே சின்ன ஏழாச்சேரியில் சதீஷ் (வயது 31) என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கல்குவாரிக்குள் சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரபு, பாலாஜி, தர்மலிங்கம், நாராயணன், ராஜா, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அத்துமீறி நுழைந்து அங்கு பணியில் இருந்த அழகுபாண்டி என்பவரை ஆபாசமாக திட்டி, சரமாரியாக தாக்கி மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர்.

    மேலும் நாங்கள் கேட்ட தொகையை கொடுக்காவிட்டால் இங்கிருந்து ஒரு லாரி கூட செல்லாது என மிரட்டல் விடுத்த னர்.

    இதுகுறித்து சதீஷ் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து பிரபு உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தேர்வு முடிவுகளில் குளறுபடி நடந்திருப்பதாக புகார்
    • போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதால் கலைந்து சென்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சமீபத்தில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வு முடிவுகள் பல்வேறு குளறுபடிகளுடன் வெளி வந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து நேற்று மதியம் கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செய லாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல றிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மேலும் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர். மாணவர்களின் இந்திய போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 8-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி கோட்டை பழைய காலனி யைச் சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மகன் ஹேடன் (வயது 13). வந்தவாசியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் ஹேடன் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வந்தவாசி -ஆரணி நெடுஞ்சாலையில் எதிரே வந்த பைக் ேஹடன் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஹேடனை அங்கிருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
    • விவசாயிகளிடம் அரசு நேரடியாக பால் கொள்முதல் செய்ய வேண்டும்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.

    இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

    பயிர் சேதங்கள் ஏற்பட்டால் அதற்கான உரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கு அரசு வழங்கும் அனைத்து பயன்களும் கிடைக்க வேண்டும்.

    விவசாயிகளிடம் அரசு நேரடியாக பால் கொள்முதல் செய்ய வேண்டும். வருவாய்து றையினர் பட்டா மாறுதல் மற்றும் பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடித்து தர வேண்டும். விவசாயிகளுக்கு விதை நெல்லை மானியத்துடன் வழங்க வேண்டும். கூட்டுறவுத்துறை சார்பில் பகுதி நேர நியாய விலைக்கடையை அமைக்க வேண்டும். விவசாயிகள் அனுப்பும் கரும்புகளுக்கு அரவை ஒப்புகை சீட்டை ஆலை நிறுவனங்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

    கிராமங்களில் குடிநீர், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தார் சாலை வசதி, இடு காட்டு பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறினர்.

    தொடர்ந்து பேசிய கலெக்டர் கூறியதாவது:-

    பா.முருகேஷ் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வரை 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு விண்ணப்ப பதிவு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். வருகிற 25-ந் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டமும் தொடங்கப்பட உள்ளது என்றார்.

    முன்னதாக மத நல்லிணக்க நாள் உறுதி மொழியை கலெக்டர் தலைமையில் அனைத்து விவசாயி களும் எடுத்து க்கொண்டனர். இதில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், நேர்முக உதவியாளர்கள் உமாபதி, தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    வெம்பாக்கம் ஒன்றியம், தென் கழனி கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிணறு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, சிமெண்ட் சாலை ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் சேர்மன் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒ. ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுமுடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஜெ.சி.கே.சீனிவாசன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி விளையாட்டு போட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    • வாகனம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் நகரில் ஏற்கனவே சாலையின் இருபுறமும் அதிக அளவில் கடைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட் டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை ஜமுனாமரத்தூர் அணைக் கட்டு தாலுகாவை அடுத்த பெரியஎட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் (வயது 32) என்பவர் தனது மகள் கவுதமி (13) மற்றும் சகோதரரின் மகன் பூவரசன் (13) ஆகியோரை தானிப்பாடியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிக்கு பைக்கில் அழைத்து சென்றார்.

    செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதையடுத்து செங்கம் போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது
    • பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள பெரிய தெரு சந்திப்பு முதல் கிரிவலப்பாதை அருகில் உள்ள பச்சையம்மன் கோவில் வரை செல்லும் பாதையில் புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் தற்போது திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மாடவீதியில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்த போக்குவரத்து மாற்றத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    நிலவிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பெரிய தெரு சந்திப்பு முதல் பச்சை யம்மன் ஆலயம் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாலை அமைக்க தேவையான பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

    அதன்படி நகராட்சி நிர்வாகம் சார்பில், சாலை அமைக்கும் பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம்மூலம் அகற்றும் பணி தொடங்கியது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடிந்ததும், சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×