search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் படித்து முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரையில் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

    இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தோராயமாக 6,553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியி ட ங்களுக்கான தோராயமாக 3,587 பணியிடங்க ளுக்கான போட்டித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்ப டவுள்ளதாக தெரிகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தினை சேர்ந்த தகுதியான, ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி பயனடையும் வகையில், அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்டு 19-ந் தேதி தொடங்கி, வார நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அல்லது அலுவலக தொலைப்பேசி 04175-233381 என்ற எண்ணில் தங்களது பெயரினை வரும் 18-ந்தேதி க்குள் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு திருவண்ணா மலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்து ள்ளார்.

    • 20 -ந் தேதி எழுச்சி மாநாடு நடைபெறுகிறது
    • பிரச்சார வாகனத்துடன் பேரணியாக வந்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக எழுச்சி மாநாட்டு பிரச்சார வாகனத்திற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மதுரையில் ஆகஸ்டு 20 -ந் தேதி அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

    இதற்கான சிறப்பு பிரச்சார வாகனத்தின் பயணத்தை சேலத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள அறிவொளி பூங்கா முன்பு பிரச்சார வாகனத்திற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து முக்கிய வீதிகளின் வழியாக அதிமுகவினர் பிரச்சார வாகனத்துடன் பேரணியாக வந்தனர்.

    அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பிருந்து மதுரை நோக்கிய பிரச்சார வாகனத்தின் பயணத்தை மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் செல்வம், மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், ஞானசவுந்தரி கனகராஜ் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சத்யசிவக்குமார், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கதர் சீனு, நகரமன்ற உறுப்பினர்கள் நரேஷ், சந்திரபிரகாஷ், பேரவை மாவட்ட துணைத்தலைவர் ரேடியோ ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் போர் மன்னன் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கேமரா காட்சிகள் வைத்து விசாரணை
    • ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்றார்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென் னாத்தூர் அடுத்த சிறுநாத் தூர் கிராமத்தை சேர்ந்தவர் அக்பர். இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அக்பர் வழக் கம்போல் கடையில் விற்பனை முடிந்ததும் பணத்தை கல் லாப்பெட்டியில் வைத் துவிட்டு, கடையை பூட் டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். கடையைத் திறந்து உள்ளே சென்றார்.

    அப்போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச் சியடைந்தார். இதையடுத்து கடை யில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு களை ஆய்வு செய்தார்.

    அதில், மர்ம நபர் ஒரு வர் கடையில் திருடும் காட்சி பதிவாகி இருந் தது. உடனே இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில், போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். பின் னர், சிசிடிவி கேமரா பதி வுகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் கடை யின் பின்பக்கம் உள்ள தகர சீட்டை கழற்றிவிட்டு கடைக்குள் புகுந்த மர்ம நபர் கல்லாப்பெட் டியை திறந்து அதிலிருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    மேலும், அந்த நபர் கடையில் மாட்டி வைத்திருந்த சாமி படத்தை பார்த்து பக்தியுடன் கும்பிட்டார்.

    பின்னர் திருட்டில் விட்டு ஈடுபட்டார். புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிசி டிவி கேமரா பதிவுகளை வைத்து கடையில் கைவ ரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடி வரு கின்றனர்.

    • கலெக்டர் முருகேஷ் வழங்கினார்
    • திருவண்ணாமலையில் சுதந்திர தின விழா கோலாகலம்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பா.முருகேஷ் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    வீட்டுமனை பட்டா, நரிக்குறவர் சான்றிதழ், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமணம் மற்றும் முதியோர் உதவித்தொகை, மகளிர் கடன், விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, சிறு தொழில் கடன் என 191 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரத்து 846 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் சரளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையார் கோவில் மாடவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர் அண்ணாமலையார் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து தலையாம்பள்ளம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கட்டிடம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர் ஊற்று ஆகியவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    • படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு
    • ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் கே.எம்.நகரை சேர்ந்தவர் நடராஜன்.

    இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்த நிலையில் தனது வீட்டுத் தோட்டத்தில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். பாம்பை பிடிக்க முயன்ற போது திடீரென நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பை பொன்னூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.

    • கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாணவர்கள் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கல்பட்டு, வேடக்கொல்லைமேடு, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், படவேடு உள்பட பல்வேறு கிராமங்களில் நேற்று கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. வருகைதந்து மக்கள் குறை கேட்டு மனுக்கள் பெற்றார்.

    குப்பம் கிராமத்தில் அரசு மேநிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    வாழியூர் ஊராட்சியில், ரூ.14.67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கிடங்கு, காளசமுத்திரம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், பள்ளக்கொல்லை புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடம் உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர் வி சேகர், போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், வாழியூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதாவெங்கடேசன், படவேடு தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் தஞ்சிம்மாள்லோகநாதன், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படவேடு கோட்டக்கரையில் கன்று விடும் திருவிழாவையும் எம்.எல்.ஏ. சரவணன் துவக்கி வைத்தார்.

    இதேபோல் கண்ணமங்கலம் அருகே அமிர்தி வன உயிரியல் பூங்கா செல்லும் வழியில் உள்ள வேடக்கொல்லைமேடு அரசு மேநிலைப்பள்ளியில் சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர், மாணவ மாணவிகள் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர கோரிக்கை மனு அளித்தனர்.

    • அமைச்சர் எ.வ. வேலு உத்தரவு
    • இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்

    திருவண்ணாமலை:

    பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செப்டம்பர் மாதத்திற்குள் சிமெண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் கான்கிரீட் சிமெண்டு சாலை பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளால் பே கோபுர தெரு, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தேரோடும் மாடவீதிகளில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சிமெண்டு சாலை பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலை பணிக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும் சாலை பணிக்காக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதை மீறி சில வாகனங்கள் சென்று வருவதால் அதனை தடை செய்ய அறிவுறுத்தினார்.

    பெரிய தெரு முதல் காந்தி சிலை வரை நடைபெறும் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப்பொறியாளர் ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் என்.தட்சணாமூர்த்தி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
    • சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- ஆற்காடு சாலையில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.

    செய்யாறில் தனியார் ஐடிஐ ,அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அனைத்து கல்வி நிலையங்களும் மாலை ஒரே நேரத்தில் முடிவடைவதால் ஆரணி பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பஸ்சில் போட்டி போட்டுக்கொண்டு ஏற்கின்றனர்.

    பஸ்சின் உள்ளே இடம் இல்லாததால் படிக்கட்டுகளில், ஜன்னல் வழியே மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் அவல நிலை உள்ளது.

    இதனால் விபத்து ஏற்படும் முன் அரசு போக்குவரத்து துறை மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அடுத்த தச்சம்பாடி, கிராமத்தை சேர்ந்தவர் சுதாகரன், (வயது 47) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2மகன்கள், 1 மகள், உள்ளனர்.

    சுதாகரன், நேற்று இரவு சேத்துப்பட்டு, புறவழி சாலை வழியாக தச்சம்பாடி, நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது புறவழி சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாகரன், பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர், சிஎம்சி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுதாகரன், வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 20-ந் தேதி மதுரை மாநாடு குறித்து பேசினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அதிமுக சார்பில் ராஜமலர் திருமண மண்டபத்தில் மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் கே.வெங்க டேசன் தலைமையில் நேற்று நடந்தது. நகர அவைத் தலைவர் ஏ.ஜனார்த்தனன், மாவட்ட நிர்வாகிகள் ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஜி.கோபால், ஆர்.கே.மெய்யப்பன், இ. வெங்கடேசன், எஸ்.கோவிந்தராஜ், எச். சுரேஷ்குமார், ஜி.தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற திருவண்ணா மலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் மதுரை அதிமுக மாநாடு சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் பங்கேற்கும் பிரம்மாண்டமான மாநாடு.

    இந்த மாநாட்டிற்கு வருபவர்களின் பெயர் பட்டியல், ஊர் பெயர், செல் எண் போன்ற விவர ங்களை ஒருங்கிணைப்பு குழுவினர் வைத்திருக்க வேண்டும் என அறிவித்தனர்.

    ஆலோசனைக் கூட்டத்தில் நகர நிர்வாகிகள் ராஜி, எழிலரசன், அருண், இளையராஜா, மகேஷ் பச்சையப்பன், திருச்சிற்ற ம்பலம், டி.கந்தசாமி, ஜி.பூபதி, வாசுதேவன், ஜெ.வெங்கடேசன், ஜெ.சிவா, ஒன்றிய செயலா ளர்கள் எம்.அரங்கநாதன், எம்.மகேந்திரன், சி துரை, வழக்கறிஞர் முனுசாமி, பொன் அருளானந்தம், வயலூர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் முன்னிலை யில் திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், நாகராஜன், செங்காடு சுரேஷ், தேமுதிகவைச் சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நேரங்களில் முதியவர்களை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுவார்.
    • போலீஸ் மூலமாக தண்டிப்பது வாய்ப்பு குறைவு தான். பெண் என்பதால் அமைதியாக உள்ளோம்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி செங்கம் மேலப்பாளையம் திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து பெண் ஒருவர் காரில் வந்து நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அப்பகுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், கிராம பஞ்சாயத்து பெரியவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு பெண்ணின் படம், ஆடியோ அனுப்பியுள்ளார்.

    இந்த படத்தில் இருக்கும் மைதிலி என்ற பெண், சேலம் அருகே உள்ள பெரியகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிராமங்களில் ஒதுக்குப்புறமான வீடுகள், குறிப்பாக வயதான முதியவர்கள் உள்ள வீடுகளை நோட்டமிடுவார்.

    அங்கு சென்று உங்கள் மகளைத் தெரியும், உங்கள் உறவினர்களைத் தெரியும் என்று கூறி அவர்கள் அணிந்திருக்கும் நகை மற்றும் பீரோவில் உள்ள நகை ஆகியவைகளை பாலிஷ் போட்டு தருவதாகவும், சில நேரங்களில் முதியவர்களை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுவார்.

    மைதிலி மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவருடன் பைக்கில் ஆண் ஒருவரும் வருவார். எனவே, பஞ்சாயத்து தலைவர்களாகிய உங்களுக்கு நான் அனுப்புகிறேன். நீங்கள் அனைவருக்கும் அனுப்புங்கள்.

    இந்த பெண் இதே வேலையாக திரிகிறார். இவளைப் பார்த்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள். ஏன், கை, காலை கூட உடையுங்கள்.

    போலீஸ் மூலமாக தண்டிப்பது வாய்ப்பு குறைவு தான். பெண் என்பதால் அமைதியாக உள்ளோம். நம்ம ஊர் மக்கள் ஏழ்மையில் உள்ளனர்.

    ஒரு பவுன் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை தொட்டுவிட்டது. திருடு போய்விட்டால் வாங்க முடியாது.

    இந்த ஆடியோ குறித்து அனைத்து பஞ்சாயத்து, தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.

    தயவு செய்து இவள் படத்தை பிரின்ட் எடுத்து, மக்களிடம் கொடுங்கள். கொஞ்சம் எங்களுக்கும் உதவி செய்யுங்கள். இவ்வாறு ஆடியோவில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் திருட்டு பெண்னை தேடி வருகின்றனர்

    இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தந்தை போலீசில் புகார்

    செய்யாறு:

    வெம்பாக்கம் தாலுகா மேல் கஞ்சாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் லட்சுமிக்கு (வயது 21) கடந்த ஒருமாதத்துக்கு முன்பு மாப்பிள்ளை பார்த்து பெற் றோர் நிச்சயதார்த்தம் செய்தனர்

    ஆனால்லட்சுமி, மேல் கஞ் சாங்குழி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரை காத வித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து ஆனந்துடன் அவரது வீட்டில் லட்சுமி வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் அவரது வீட்டில் லட் சுமி தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை பூபாலனுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவி மற்றும் குடும் பத்தினருடன் சென்று கதறினார். இது குறித்து அவர் பிரம்மதேசம் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரில் தனது மகள் லட்சுமி சாவில் சந்தேகம் இருப்பதாக தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து பிரம்மதேசம் சப்- இன்ஸ் பெக்டர் பாபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×