search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
    • காப்பர் ஒயர் 100 கிலோவும் எடுத்து சென்றனர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த ராட்டினமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 52). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக அரிசி ஆலை உள்ளது.

    இதில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ஜெயக்குமார் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல இருந்ததால் அரிசி ஆலையில் உள்ள அனைவருக்கும் அன்று விடுமுறை அளித்துள்ளார்.

    பின்னர் அரிசி ஆலை மூடிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து அரிசி ஆலை திறந்தார். அப்போது 25 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகள் மற்றும் காப்பர் ஒயர் 100 கிலோ ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொள்ளை போன அரிசி மூட்டைகள் மற்றும் காப்பர் ஒயரின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கொண்ட கும்பல் அரிசி மூட்டைகளை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஆரணி சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து மருமகம்பலை தேடி வருகின்றனர்.

    அரிசி ஆலையில் மர்ம கும்பல் புகுந்து அரிசி மூட்டைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கவர்னர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
    • திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர்.

    வேங்கிகால்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மதியம் திருவண்ணாமலைக்கு வந்தார்.

    அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து வந்த கவர்னர் ரவி, கிரிவலப்பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களை சந்தித்து பேசி அன்னதானம் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வள்ளலார் ஆசிரமத்தில் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகளுடனான ஓர் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் தமிழக கவா்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூட்டரங்கில் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்டு இருந்த விளைபொருட்களை பார்வையிட்டார்.

    பின்னர் கவர்னர் அவரது குடும்பத்துடன் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத் ஆசிரமத்தில் தரிசனம் செய்த பின்பு நேற்று இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கவர்னர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், நவகிரக சன்னதி தொடர்ந்து பாதாள லிங்கத்தை தரிசனம் செய்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையிலான உறுப்பினர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

    கிரிவலப் பாதைக்கு சென்று நிருதி லிங்கத்தில் சாமி தரிசனம் செய்த கவர்னர் அங்கிருந்து தனது மனைவி மற்றும் மகளுடன் கிரிவலம் சென்றார். திருநேர் அண்ணாமலையார் சன்னதி வரை சென்று நிறைவு செய்தார்

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். கிரிவலத்தை முடித்த பின்பு ஜவ்வாது மலைக்கு புறப்பட்டு சென்றார்.

    இன்று மாலை காவலுார் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுவிட்டு செஞ்சிக்கோட்டை செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கானது அல்ல, பாரத நாட்டில் உள்ள அனைவருக்கும் உள்ளடக்கியதாகும்.
    • அசைவ உணவை விருப்பப்பட்டு சாப்பிடுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியை அவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருவண்ணாமலை மிகப்பெரிய ஆன்மிக பூமி. இந்திய நாடு மற்ற நாடுகளை போல் அல்ல. மற்ற நாடுகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை. இந்தியா அப்படி இல்லை. பாரத நாடு என்பது சாதுக்கள், ரிஷிகளின் தவ வலிமையினால் உருவாக்கப்பட்டது.

    சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கானது அல்ல, பாரத நாட்டில் உள்ள அனைவருக்கும் உள்ளடக்கியதாகும். நான், எனது என்று இல்லாமல் நாம், நமது என்பது தான் சனாதனம் ஆகும். குறுகிய காலங்களாக சனாதனம் அழிவுகளை சந்தித்து வருகிறது. 1947-ல் தான் பாரத நாடு உருவானது என்று பலர் எண்ணுகின்றனர். 1947-ல் விடுதலை தான் பெற்றோம். தமிழகத்தில் பல பகுதிகளை நான் சுற்றி பார்த்து உள்ளேன். பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பதால் பெருமிதம் கொள்கிறேன்.

    அசைவ உணவை விருப்பப்பட்டு சாப்பிடுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். அதற்கு கிரிவலப் பாதை உகந்த இடமில்லை. கிரிவலப் பாதையில் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கு உண்டான தன்னால் முடிந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து கவர்னருக்கு சாதுக்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் சாதுக்களுக்கு கவர்னர் அன்னதானம் வழங்கினார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
    • அறநிலைத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் அடுத்த மண்மலையில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும்.

    இங்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக பாலசுப்பிரமணியர் கோவிலின் மேலே செல்ல அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு வழிநடுவில் தற்காலிக உண்டியல் அமைத்து பக்தர்கள் செல்ல முடியாத அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.

    இது குறித்து அங்கு மேற்பார்வையில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் இதுகுறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் பக்தர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோவில் படிக்கட்டில் வழியில் உண்டியல் வைத்து தடைகள் ஏற்படுத்துவதை தவிர்க்கவும், அடிப்படை வசதிகளை முழுமையாக செய்திடவும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டி பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • பெயர் பலகையை திறக்கப்பட்டது

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் புதிய நெடுஞ்சாலை துறை உட்கோட்ட துவக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். தமிழக சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.

    திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் அனைவரையும் வரவேற்றார்.

    கீழ்பென்னாத்தூரில் புதிய நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் உட்கோட்டத்தை தமிழக நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கு ஏற்றிவைத்தும், பெயர் பலகையை திறத்து வைத்தும் உட்கோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    • 440 பேர் தரிசனம்
    • கிரிவலம் சென்றனர்

    வேங்கிக்கால்:

    ெரயில்வே சுற்றுலா மற்றும் உணவுத் துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா ரயில் செகந்திராபாத்தில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று காலை திருவண்ணாமலை ெரயில் நிலையம் வந்தடைந்தது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் 440 பேர் சுற்றுலா ெரயிலில் வந்தனர்.

    இவர்கள் அருணசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசித்து பின்னர் கிரிவலம் சென்றனர்.

    இன்று இரவு 10 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சுற்றுலா ெரயில் மதுரை மற்றும் ராமேஸ்வரம் செல்கிறது.

    • நாளை நடக்கிறது
    • 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

    முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    மேலும் இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    8-ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை படித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வரும்போது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4, ரேசன் கார்டு, சாதிச்சான்று, கல்வித் தகுதி சான்று ஆகியவற்றின் நகல்களை எடுத்து வரவேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை பெற 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • தண்டராம்பட்டில் 52.60 மி.மீ பதிவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 100 டிகிரி வரை வெயிலில் தாக்கம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று, தொடர்ந்து லேசான சாரவ் மழை பெய்ய தொடங்கியது அதன் பிறகு பரவலாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ய தொடங்கின.

    இதில் அதிகபட்சமாக தண்டராம்பட்டு பகுதியில் 52.60 மில்லி மீட்டர், வெம்பாக்கம் 33 மில்லி மீட்டர், செய்யார் 13 மில்லி மீட்டர், வந்தவாசி 12 மில்லி மீட்டர், திருவண்ணாமலை ,கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் 8 மில்லி மீட்டர், ஆரணி 5 மில்லி மீட்டர், போளூர் 4.40 மில்லி மீட்டர், ஜமுனாமுத்தூர் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 138 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    மழை பெய்யததால் பொதுமக்கள, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த பெரிய ஏழாளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 30). இவர் செய்யாறு சிப்காட்டில் கடந்த 10 வருடமாக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி நிர்மலா ( 27), இவர்களுக்கு தீபன் (7) என்ற மகனும், ஒரு வயதில் சஸ்மிதா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

    பாஸ்கரனுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்க ப்பட்டதால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 8-ந் தேதி மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு பாஸ்கரன் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக செங்கல் பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாஸ்கரின் தந்தை தாமோதரன் தூசி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பருவகால தொழிலாளர்களை நிரந்தர படுத்த கோரிக்கை
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிரந்தர தொழிலாளர்கள் 175 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    ஒப்பந்த தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மொத்தம் 400-க்கும் இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றியும் அரசுக்கு இணையான ஊதியம் வழங்க அரசு மறுத்து வருகிறது.

    இதனால் அரசு உயர்வுக்கு இணையான ஊதியம் பெறாமல் மெலிவடைந்த நிலையில் சர்க்கரை தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களின் குறைகளை போக்கும் விதமாக அரசு உரிய பேச்சு வார்த்தை நடத்தி அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவும் அதே போல நீண்ட காலமாக பணியாற்றி வரும் பருவகால தொழிலாளர்களை நிரந்தர படுத்தவும் கோரிக்கை வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் மீது நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட் டம் தச்சம்பட்டு அருகே உள்ள தேவனூர் பகுதியைச் சேர்ந்த காசி மகன் அருள்கு மார் (வயது 37). இவரை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த மே மாதம் 31-ந் தேதி துப்பாக்கி யால் சுட்டும் கத்தியால்வெட் டியும் படுகொலை செய்தனர்.

    இது குறித்து தச்சம்பட்டு 'போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்தியந்தல் பகுதியைச் சேர்ந்த மாமலை வாசன் (31), தச்சம்பட்டு அருகே உள்ள தேவனூர் பகு தியைச் சேர்ந்த இளங்கோ வன் (33), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங் கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (22), உலகலாப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (22), சங்க ராபுரம் டவுன் லோகநாதன் (வயது 32) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்த னர்.

    இவர்கள் குற்ற சம்பவங் களில் தொடர்ந்து ஈடுபடாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் பரிந்துரைத்தார்.

    அதன் பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டதைய டுத்து அதற்குண்டான நகல் வேலூர் சிறையில் இருப்ப வர்களிடம் வழங்கப்பட்டது.

    • 108 ஆம்புலன்சிற்கு தகவல்
    • 35 பேர் உயிர் தப்பினர்

    செய்யாறு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் இருந்து ஒரகடகத்திற்கு தனியார் கம்பெனி பஸ் சுமார் 40 பேரை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை காஞ்சிபுரம் -கலவை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.

    கொடையம்பாக்கம் அருகே வரும்போது டிரைவர் தூக்க கலக்கத்தில் வளைவில் திருப்பினார். அப்போது பஸ் தாறுமாறாக ஓடி திடீரென சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சிறு காயங்களுடன் 35 பேர் உயிர் தப்பினர். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து மோரணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×