search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பவுர்ணமி நாளில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவிவட அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். மேலும் கட்டண தரிசனம் வழியிலும் பக்தர்கள் 2 மணி நேரம் நின்று சாமி தரிசனம் செய்தனர். கட்டண தரிசனம் வழியில் வந்த பக்தர்கள் போதிய குடிநீர் வசதி இல்லாமல் அவதி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆடி மாத பவுர்ணமி, நாளை 1-ந் தேதி அதிகாலை 3.26 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் 2-ந் தேதி அதிகாலை 1.05 மணிக்கு நிறைவு பெறுகிறது. மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பவுர்ணமி கிரிவலத்தை யொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1000 சிறப்பு பஸ்களும், தெற்கு ரெயில்வே சார்பில் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பவுர்ணமி நாளில், அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதிலும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
    • இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நாடு முழுவதிலும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று காலை 5 மணி முதல் 140 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆந்திராவில் இருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களும் திருப்பதி மத்திய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    சிறப்பு பஸ்களில் அமராவதி, கருடா, இந்திரா ஏ.சி, ஏ.சி அல்லாத சூப்பர் அல்ட்ரா டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் உள்ளன. ஏற்கனவே 100 சிறப்பு பஸ்களில் பாதி அளவு டிக்கெட் முன்பதிவு முடிந்து உள்ளது.

    பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளன. இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும் என வலியுறுத்தினர்
    • போக்குவரத்து பாதிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை ஊராட்சி, மேட்டு கோசாலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ெபாதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்வதில்லை. இது குறித்து பல முறை புகாார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி இன்று காலை காலி குடங்களுடன் திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும் என வலியுறுத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தீபாராதனை காண்பிக்கப்பட்டது
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    இதை முன்னிட்டு சாமிக்கும் நந்திபகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    • பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்
    • விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் ஊசாம்பாடி ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெற விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பொது மக்களிடம் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் இதில் தகுதியானவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் அப்படி கிடைக்கப்பெறா தவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் மேல்முறையீடு செய்து பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.

    இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர். கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், எம் பி அண்ணாதுரை எம் எல் ஏ சரவணன், ஒன்றிய செயலாளர் ராமஜெயம்,

    ஒன்றிய குழுத்தலைவர். தமயந்தி ஏழுமலை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கல்லை தூக்கினால் திருமணமாகும் என அறிவிக்கப்பட்டது
    • ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

    இதில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகள், அரிசி வகைகள், உணவு தானியங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான இயற்கை உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    மேலும் இளைஞர்கள் விளையாட்டு களம் என்ற பெயரில் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான இளைஞர்கள் மற்றும் இளம்பெ ண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    இந்த இள வட்டக்கல் தூக்கு பவர்கள் யாராக இருந்தாலும் இந்த ஆண்டே திருமணமாகும் என ஒலிபெருக்கியில் அறிவித்தபடி இருந்தனர். இதில் ஏராளமான இளம்பெண்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு தூக்கினர்.

    இளவட்டக்கலை பெண் ஒருவர் ஆர்வமுடன் தூக்கும்போது, அவரது நண்பர்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டனர்.

    அதேபோல் இளவட்டக்கலை சில சிறுவர்களும் தூக்க முயன்றனர்.

    • தாய் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த நந்தியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 40). சென்னையில் லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

    இவர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் நந்தியம்பாடி கிராமத்திற்கு வருவது வழக்கம்.

    அதன்படி ஊருக்கு வந்திருந்த ஜெகதீஸ்வரன் நேற்று இரவு தனது விவசாய நிலத்தில் உள்ள மாடுகளில் பால் கறப்பதற்காக மனைவி மீரா (34), மகள் காருண்யா (12) ஆகியோருடன் பைக்கில் விவசாய நிலத்துக்கு சென்றார். பால் கறந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

    சேத்துப்பட்டு ரோட்டில், பொன்னூர் மலை அருகில் வந்த போது எதிரே சேத்துப் பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஜெகதீஸ்வரன் மற்றும் காருண்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். பலத்த காயத்துடன் மீராவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பொன்னூர் போலீசார் விரைந்து சென்று ஜெகதீஸ்வரன் மற்றும் காருண்யா உடல்களை மீட்டு பிரேதபரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் தந்தை-மகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் 28-ந் தேதி 2-ம் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.

    விழாவைமுன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதணை நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி அம்மனை தரிசனம் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தார்.

    கோவில் சார்பில் கணேஷ் சிவாச்சாரியார் பிரசாதங்கள் வழங்கினார். மாலையில் திருவண்ணாமலை டி.ஆர் பிச்சாண்டி குழுவினர் நாதஸ்வர கச்சேரி நடந்தது.

    இரவில் துர்க்கா அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் இ.ஜீவானந்தம், செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் மகாதேவன், சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கின்றன
    • கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த குடியிருப்பு வாசிகள்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டவுன் 33 வார்டுகள் உள்ளன.

    மேலும் தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி நகர மன்ற தலைவராவும் துணை தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பாரிபாபு உள்ளிட்ட 33-வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர்.

    மேலும் 2-வது வார்டில் நீண்ட நாட்களாகவே கழிவுநீர் கால்வாயை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கின்றன.

    இது சம்பந்தமாக ஆரணி நகராட்சியில் புகார் அளித்து எந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை தூய்மை பணியாளர் பற்றாக்குறையால் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ள தாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகின்றன.

    இந்நிலையில் 2-வது வார்டில் கால்வாய் அடைப்பை அப்பகுதி மக்களே தானாக முன் வந்து கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தனர்.

    மாவட்ட நிர்வாகம் உடனடியாக நகராட்சியில் தூய்மை பணியாளர்ககள் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வலியுறுத்தினர்.

    • வேலூர், விழுப்புரத்திலிருந்து இயக்கப்படுகிறது
    • ஆடி மாத பவுர்ணமி முன்னிட்டு ஏற்பாடு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் மெமு ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.

    வேலூர் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி இரவு 9.50 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு அடைகிறது.

    பின்னர் 2-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை காலை 5.35 மணிக்கு அடைகிறது.

    மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.

    பின்னர், திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு,விழுப்புரம் ரெயில் நிலையத்தை பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடையும். தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாகதிருவண்ணாமலை ரெயில்நிலையத்தை இரவு 10.45 மணிக்குச் சென்றடையும்.

    பின்னர் திருவண்ணா மலை ரெயில் நிலையத்தில் இருந்து ஆக. 2-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் வேலூர் வழியாக சென்னை கடற்கரைக்கும், விழுப்புரம் வழியாக தாம்பரம் மற்றும் மயிலாடுதுறைக்கும் பயணிக்கலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • 507 மாணவிகளுக்கு வினியோகம்
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்

    செய்யாறு:

    செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கினார்.

    வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிக்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னதுரை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை யாசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 507 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் கே. விஸ்வநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேவி, நகர மன்ற துணைத் தலைவர் பேபி ராணி, ஒன்றிய செயலாளர் ஞானவேல், தொண்டர் அணி அமைப்பாளர் ராம்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் தலைமையிலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக் முன்னிலையிலும் ஒ.ஜோதி எம்எல்ஏ 371 மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

    • 5 மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையினை கலெக்டர் வழங்கினார்
    • மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கலெக்டர் முருகேஷ், இன்று புதிதாக 5 மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையினை வழங்கி பேசினார்.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பழங்குடி இன மாணவ, மாணவி களுக்கு தொழிற்பிரிவு வகுப்புக ளான பொருத்துநர், கம்மியர் மோட்டார் வண்டி, கம்பியாள், பற்றினைப்பவர், குழாய் பொருத்துபவர். தொழிற்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தன்னியக்கு மயம், மேம்படுத்தப்பட்ட எந்திர தொழில்நுட்ப பணியாளர் போன்ற தொழிற்பிரிவு பாடங்களை பழங்குடி இன மாணவ, மாணவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு அரசால் பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.

    அனைத்து பயிற்சியா ளர்களுக்கும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750-ம் மற்றும் விலையில்லா மடிக்கணினி, பாட புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடைகள், மூடுகாலணி, இலவசபேருந்து கட்டண சலுகை மாணவர்கள் தங்கி பயில விடுதி வசதிகள் அரசு பள்ளி மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது. மாணவ, மாணவியர்கள் தங்கள் மதிப்பெண் அடிப்ப டையில் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கல்வி படித்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும்.

    மேலும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர்கள் சேர்க்கை இன்று வரை 60 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    மேலும் இம்மாதம் 31.07.2023 வரை புதிய மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என கலெக்டர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (ஆரணி) . தனலட்சுமி, மாவட்ட திட்ட அலுவலர் பழங்குடியினர் நலன் அலுவலர்.

    ப.செந்தி ல்குமார், அரசினர் தொழிற் பயிற்சி முதல்வர்.ஆர்.ஜெய்சங்கர், ஜவ்வாது மலை ஒன்றிய குழுத்த லைவர் ஜீ வா மூர்த்தி. உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்ட னர்.

    ×