search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
    • 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    வந்தவாசி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கங்காப்பூர் என்ற இடத்தில் கோலோ கோதாம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

    கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடவும் இது போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்க கூடாது என்ற நோக்கத்திலும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தப்படி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்களுடைய பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

    சீடர்கள் 3 பேரும் சாலையில் தெர்மாகோல் சீட் மீது படுத்து ஊர்ந்த படி ராமேஸ்வரம் நோக்கி பாதரையாத்திரையாக செல்கின்றனர்.

    இவர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    உலக நன்மைக்காகவும் கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் பரவக்கூடாது என்ற நோக்கத்திலும் உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    தினமும் 10 கிலோமீட்டர் வரை செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த 23-ந் தேதி வழக்கம்போல் ஹரி பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தூர் அடுத்த நெடுங்காவடி கிராமத்தில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கி பண்ணை வீடு கட்டி அதில் வசித்து வந்தார்.

    பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    அப்போது அந்த வீட்டை ஏற்கனவே திருவண்ணாமலையில் தங்கியிருந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு சென்றுள்ளனர். அந்த பெண் தனிமையில் பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

    பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும் அந்த மூதாட்டியை அங்கிருப்பவர்கள் மீனாட்சியம்மாள் என செல்லமாக பெயர் சூட்டி அழைத்து வந்தனர்.

    மீனாட்சியம்மாவுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்பவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த 23-ந் தேதி வழக்கம்போல் ஹரி பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மீனாட்சியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர், ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

    நேற்று ஹரி இறந்த அயர்லாந்து பெண் மீனாட்சியம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாவிடம் மனு கொடுத்துள்ளார்.

    மனு மீது விசாரணை செய்த கிராம நிர்வாக அலுவலர், இறந்த பெண் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் சந்தேகமடைந்து இதுகுறித்து சாத்தனூர் அணை போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்படி தாசில்தார் அப்துல்ரகூப், மண்டல துணை தாசில்தார் மோகனராமன், போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழி வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    புதைக்கப்பட்ட அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் வந்ததும் அவரிடம் புகார் பெற்று அதன் பின்னர், இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்.

    அதன் பின்னரே, அவர் எப்படி இறந்தார்? இயற்கையாகவே இறந்தாரா அல்லது பணத்திற்காக அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்பது தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபாடு
    • பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி கோவில் சுற்றி வந்து அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்

    போளூர்:

    போளூர் டவுன் குளத்து மேட்டில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் 65 -ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இதனையோட்டி காலை அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கரகத்துடன் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் வீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி கோவில் சுற்றி வந்து அலகு குத்தியவாறு அந்தரத்தில் தொங்கிய மாலை அணிவித்து நேர்த்தி க்கடன் நிறைவே ற்றினர் மதியம் 1.00 மணி அளவில் கூழ்வா ர்த்தலும் அன்னதா னமும் நடைபெ ற்றது ஏற்பாடுகளை போளூர் நகர சலவை தொழிலா ளர்கள் சங்கத்தினர் செய்திரு ந்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் வெல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. வாணவேடிக்கை மேளவாத்தியங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • மனைவி போலீசில் புகார்
    • வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த குடை நகர் கே எச் கார்டன் சேர்ந்தவர் பிரதாப் (வயது 28). இவர் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் பூர்ணிமா என்பவரை கடந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பூர்ணிமா அக்கம் பக்கத்தில் வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தேடி உள்ளார்.

    அவர் கிடைக்காததால் செய்யாறு போலீசில் மாயமான கணவரை கண்டுபிடித்து தர கோரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதாப்பை தேடி வருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன் கொடநகர் நல்ல தண்ணி குலத்தெருவை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 61). தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி பங்க் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

    அதே பகுதி சேர்ந்த காசி (50) என்பவரும் பங்க் கடைக்கு வந்தார். அப்போது இவர்களுக்கு இடையே மது அருந்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை கண்ட காசியின் மகன் அஜித்குமார் (25) சம்பவ இடத்திற்கு வந்தார். தனது தந்தையிடம் ஏன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாய் என்று உதய சூரியனிடம் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார்

    அருகில் இருந்த கட்டையை எடுத்து உதய சூரியனை சரமாரியாக தாக்கினார். இதில் உதயசூரியன் படுகாயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து உதயசூரியன் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். மேலும் போலீசார் காசியை தேடி வருகின்றனர்.

    • ஆதரவற்ற விதவைகள் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
    • திருவண்ணாமலை கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், சீர்மரபினர் குழுவாக சேர்ந்து ஆயத்த ஆடையகம் அமைக்க 3 லட்ச ரூபாய் வரை அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

    நிதி உதவி பெற 10 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். குழுவில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வயது 20 ஆக இருக்க வேண்டும்.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுக்கள், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • பா.ம.க. சார்பில் மரக்கன்று நடப்பட்டது
    • கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி குளத்துமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் 85-வது பிறந்த நாளையொட்டி நகர பா.ம.க. சார்பில் ஆரணி சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    நகர செயலாளர் பேட்டரி வரதன் தலைமை தாங்கினார்.

    வன்னியர் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ப.மச்சேந்திரன், வந்தவாசி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாபுவிஜயன், ஒன்றிய செயலாளர் மும்முனி வேலு, முன்னாள் மாவட்ட செயலாளர் மன்னப்பன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் ராமஜெயம் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ்,அத்திப்பாக்கம் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன், செம்பூர் என் எஸ் மணி மருதாடு பாபு, ரங்கராஜ், தேவா, விக்கி,செல்வராஜ், சந்தோஷ்,பரத் உள்ளிட்ட பாமக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பழைய பஸ் நிலையம் கோட்டை மூலை பள்ளி தெரு ஆகிய பகுதிகளில் பாமக கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • ஏஐடியூசி மாவட்ட தலைவரும், சட்ட ஆலோசருமான முத்தையன்சங்க பெயர்பலகை திறந்துவைத்தார்
    • சங்க உறுப்பினர் கலந்து கொண்டனர்

    கீழ்பென்னாத்தூர் :

    கீழ்பென்னத்தூரில் ஏஐடியூசி அனைத்து வாகனம் மற்றும் பொது சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

    செயலாளர் வி. முருகன், பொருளாளர் அறிவழகன், துணைத்தலைவர் ஜெ ஏழுமலை, துணை செயலாளர்கள் ராஜேஷ், எம்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் எஸ். முருகன் வரவேற்றார். ஏஐடியூசி மாவட்ட தலைவரும், சட்ட ஆலோசருமான முத்தைய ன்சங்க பெயர்பலகை திறந்துவைத்தார். கவுரவ தலைவர் ராஜேந்திரன் சங்க கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், கவுரவ ஆலோசகர் கிருஷ்ணராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் மாதேஸ்வரன், சமூக ஆர்வலர் எல்ஐசி ம. சத்தியவேல், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் துரை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சங்க உறுப்பினர்கள் முத்து, வெங்கடேசன், முருகன், சுபாஷ், கோபிநாத், வழங்கினர்.

    முடிவில் சங்க உறுப்பினர் எஸ். முருகன் நன்றி கூறினார்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    சேத்துப்பட்டு தாலுகா அருந்ததிபாளையம் பகு தியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் கடந்த 2015- ம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பே ரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்ப திவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர் பான வழக்கு விசாரணை நேற்று திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடை பெற்று வந்தது.

    இந்த நிலை யில் நேற்று இவ்வழக்கு மீண் டும் கோர்ட்டில் விசார ணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை நீதிபதி பார்த்தசாரதி விசாரித் தார்.

    நேற்று அவர் தனது தீர்ப் பில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபாகர னுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறு மிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • காஞ்சீபுரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் கிராமம் பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 50).

    இவர் காஞ்சீபுரம் அருகே உள்ள பஞ்சு பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு அஜித், அமீத் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இளங்கோவன் நேற்று வழக்கம்போல் வேலைக்கு செல்வ தாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். ஆனால் வேலைக்கு செல்லாமல் தூசி அருகே மாமண்டூர் கிராமத்தில் பிற்பகல் 12 மணி அளவில் விவசாய நிலத்தில் உள்ள அத்தி மரத்தில் சேலையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் . பின்னர் மரத்தில் தொங்கிய நிலையில் கிடந்த இளங்கோவன் உடலை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவரது மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் நிலையத்தில் புகார்
    • தடயங்களை சேகரித்து விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் ஈடியா தோப்பு பெரிய ஏரிகரை அருகே மாணிக்காத்தம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அவ்வழியே சென்ற சிலர் பார்த்து, கிராம பிரமுகர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம், 2 பித்தளை பானைகள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று பார்வையிட்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×