search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மர்ம நபர் கைவரிசை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மழையூர் கூட்டு சாலையை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் அவர் கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் மகாதேவனின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து மகாதேவன் வட வணக்கம் பாடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • சாலையில் நடந்து சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    மேல்மலையனூர் ஒன்றியம் கம்மந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54), விவசாயி.

    இவர் சேத்துப்பட்டில் ஆரணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ செல்வராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றார்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போஸ்டர் ஒட்டுவேன் என மிரட்டல்
    • ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் பேரூ ராட்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் அலு வலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகங்களில் உள்ள சுவர்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட் டிருந்தது.

    இந்த சுவரொட்டிகளை அதிகாரிகள் முன்னிலையில் அலுவலக ஊழியர்கள் கிழித்து அகற்றினர்.

    இதையறிந்த பெரணமல்லூர் அதிமுக நகர துணைச்செயலாளர் .கே.எஸ்.அறிவழகன், அவரது நண்பரும் ஒப்பந்ததாரருமான முருகன் ஆகிய இருவரும், கடந்த 7-ந் தேதி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தரா ஜனை செல்போனில் தொடர்பு கொண்டு, 'அதிமுக சுவரொட்டியை ஏன் அகற்றினீர்கள்? என கேட்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    மேலும், 'அதே இடத்தில் மீண்டும் போஸ்டர் ஒட்டுவேன், மீறி கிழித்தால் கையை வெட்டு வேன்' என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதே போல், சுவ ரொட்டி அகற்றியது தொடர்பாக பிடிஓ வெங்கடேனுக்கும், இவர் கள் இருவரும் போனி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜன், பிடிஓ வெங்கடேசன் ஆகியோர் தனித்தனியே பெரணமல்லூர் போலீ சில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அதிமுக நகர துணைச்செயலாளர் அறிவழகன் உட்பட 2 பேரையும் தேடிவந் தனர்.

    மேலும், செய்யாறு டிஎஸ்பி வி.வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதை யடுத்து, தலைமறைவாக இருந்த அறிவழகன், முரு கன் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்
    • தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்

    திருவண்ணாமலை:

    108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஆண் குழந்தை பிறந்தது. திருவண்ணமலை தாலுகா நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மனைவி தீபா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான தீபாவிற்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில்அழைத்துச்சென்றனர்.

    நூக்கம்பாடியில் இருந்து மங்கலம் வழியே சென்று கொண் டிருந்தபோது தீபாவிற்கு பிரசவவலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த டிரைவர் தினகரனுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் தீபாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் பத்திரமாக மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் ஏரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏரியில் இருந்து மண் கடத்தி வந்த 2 லாரிகளை மடக்கினர். அப்போது டிரைவர்கள் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதனைஅடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து, கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

    • புறம்போக்கு இடத்தில் 4 அடி அளவில் ஆக்கிரமிப்பு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வெம்பாக்கம்:

    தூசி அடுத்த மகாஜனம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்கள் கல்லாங் குத்து பகுதியில் புறம்போக்கு இடத்தில் 4 அடியில் சுற்றி சுவர் எழுப்பி உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர்கள் கருணாநிதி, வெங்கடேசன், ராஜேஷ், கார்த்திக். கருணாநிதிக்கு கல்லாங்குத்து பகுதியில் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் முருகன் 4 அடி அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதி உள்ளிட்ட தரப்பினர் முருகன், மகேஸ்வரியிடம் சென்று எங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளாய் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கருணாநிதி பொக்லைன் ஏந்திரம் வரவழைத்து எழுப்பிய சுவரை பிடித்து தள்ளினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி, வெங்கடேசன், ராஜேஷ், கார்த்தி ஆகியோர் கணவன், மனைவி இருவரையும் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மகேஸ்வரி தூசி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாநிதி, வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    வேலூரில் இருந்து ஆம்பூருக்கு கடலை எண்ணெய் பாக்கெட் மற்றும் டின்களை ஏற்றுக்கொண்டு மினி லாரி சென்றது.

    லாரியின் முன்பக்கத்தில் டிரைவர் உள்பட 3 பேர் அமர்ந்து பயணம் செய்தனர். மாதனூர் அடுத்த தோட்டாளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பில் மோதியது.

    தடுப்பபு வேலியில் பாய்ந்தபடி சென்ற லாரி சிறிது தூரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் சாலை நடுவில் அமைக்கப்பட்டிருந்த 5 உயர்கோபுர மின்விளக்கு கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது. மேலும் லாரியில் ஏற்றி சென்ற எண்ணெய் பாக்கெட்கள் நிரப்பப்பட்ட பெட்டிகளும் சாலையில் சிதறி கிடந்தன.

    விபத்து ஏற்படுத்திய மினி லாரியால் வேலூர் மற்றும் திருப்பத்தூர் செல்லும் 2 வழித்தடத்திலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    நீண்ட நேரமாக வாகனங்கள் சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அணிவகுத்து என்ற வாகன போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தோட்டாளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    வந்தவாசி:

    தெள்ளாரை அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன்(32). இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சங்கீதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற ராமநாதன் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லையாம்.

    இந்த நிலையில் மருதாடு கிராமத்தில் வசிக்கும் சங்கீதாவின் தந்தை மூர்த்தி தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

    அப்போது அந்த நில கிணற்றில் குப்புற கவிழ்ந்த நிலையில் ராமநாதன் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நீச்சல் தெரியாத ராமநாதன் குளிக்கும்போது கிணற்றினுள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு-பரபரப்பு
    • 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்

    செய்யாறு:

    செய்யாறு மாங்கால் கூட் ரோடு பகுதியில் பெரிய அள விலான தொழிற்சாலைகள் செயல்படும் சிப்காட் தொழிற் பேட்டை அமைந்துள்ளது.

    இந்த தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்ய அருகில் அமைந்துள்ள கிராமங்க ளான அத்தி, இளநீர்குன்றம், நர்மா பள்ளம், மேல்மா, தேத் துறை, குரும்பூர், வீரம்பாக்கம், வட ஆளப்பிறந்தான், நெடுங் கல் ஆகிய 9 ஊர்களில் சுமார் 3 ஆயிரத்து 174 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தின் மூலம் நடந்தன.

    இந்த நிலையில் விவசாய நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி சிப் காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தை நோக்கி ஆட்சேபனை மனு அளிப்பதற்காக டிராக்டர் களில் விவசாயிகள் அணிவ குத்து சென்றனர்.

    அங்கு கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை யில் 274 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர். செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே டிராக்டர்களை போலீசார் தடுத்தனர். டிராக்டரில் இருந்து இறங்கிய விவசாயி கள் செய்யாறு கூட்டுறவு சர்க் கரை ஆலையில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் ஊர் வலமாக நடந்தே சென்றனர்.

    திடீரென மாற்றுப்பாதை யில் உதவி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுத்தனர்.

    அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் சமாதானத்தை ஏற்ற விவசாயிகள் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்றனர். பேரிகார்டுகள் அமைக்கப் பட்டு அலுவலகத்திற்குள் செல்ல முடியாத வகையில் போலீஸ் பாதுகாப்பு வளை யம் போடப்பட்டிருந்தது.

    இதனை பார்த்த விவசாயிகள் மீண்டும் ஆவேசம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டு தர்ணா செய்தனர். அவர்களிடம் சிப்காட் விரி வாக்க மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் பேச்சு வார்த்தை நடத்தினார். அப் போது எங்களுடைய வாழ்வாதா ரத்தை பறிக்கும் தொழிற்சா லைகள் எங்களுக்கு தேவை யில்லை எனவும், கார்ப்ப ரேட் நிறுவன வளர்ச்சிக்காக எங்களுடைய வாழ்வாதார மான விவசாயத்தை அழித் திட வேண்டாம்" எனவும் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்பகுதிக்கு வந்த செய் யாறு உதவி கலெக்டர் அனா மிகாவிடம், விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என பெண்கள் வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இச்சம்பவத் தால் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவல கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன், அருணகிரிசத்திரம், கண்ணப்பன் தெருவில் வசிப்பவர் சரவணன் (வயது 52). ஆரணி தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலையஅலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (48).

    சரவணன் வீட்டில் 6 மாதமாக உபயோகப்படுத்தாமல் இருந்த ஸ்டவ் அடுப்பை எடுத்து அதில் மண்ணெண்ணை ஊற்றி வேகமாக பம்ப் செய்தார். இதில் எதிர்பாராத நிலையில் ஸ்டவ் வெடித்தது.

    அந்த நேரத்தில் ஜெயலட்சுமி காஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். ஸ்டவ் வெடித்ததில் மண்ணெண்ணை சிதறி கியாஸ் அடுப்பில் பட்டதால் ஜெயலட்சுமி, சரவணன் ஆகி யோரது உடையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜெயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சரவணனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சரவணனை பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரியும் இறந்தார்

    இந்நிலையில் சரவணன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த நாட்களில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போதுமான சுகாதார வசதிகள் இல்லை
    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு வெளிநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு என நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் போதுமான சுகாதார வசதிகள் இல்லை என நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவு சுகாதார பணிகள் செய்வதில்லை என நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 தினங்களாக செங்கம் பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்த மழையின் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்கின்றது. தேங்கி நிற்கும் மழை நீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

    இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் நோயாளிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இது போன்ற சுகாதார சீர்கேடுகளால் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படும் அவல நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள கழிவறை கட்டிடம் நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கழிவறை கட்டிடத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும், அரசு மருத்துவமனை முழுவதும் சுகாதார பணிகளை முழுமையாக செய்யவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஜவ்வாது மலை கோடை விழாவுக்கு வருகிறார்
    • எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

    கலசபாக்கம்:

    கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோடை விழா நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு ஜவ்வாதுமலையில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எம்.எல்.ஏ.க்கள் கலசபாக்கம் சரவணன், செங்கம் கிரி ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்தில் வருகிற 18-ந் தேதி ஆலங்காயத்திலிருந்து ஜமுனாமரத்தூருக்கு வருகை தர இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எல்லை பகுதியில் பல்லாயிர க்கணக்கானோர் திரண்டு சிறப்பாக வரவேற்பு அளிப்பது. பின்னர் நடக்கும் சுற்றுலா மாளிகை திறப்பு விழா, கலைஞர் நினைவு நூற்றாண்டு

    பயணியர் நிழற்கூடம் திறப்பு ஆகியவற்றில் கலந்துகொண்டு உற்று சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தப்பட்டது.

    பின்னர் கோடை விழா விற்காக பிரமாண்டமாக அமைக்க ப்பட்டு வரும் பந்தல் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×