என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![லைவ் அப்டேட்ஸ்: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு லைவ் அப்டேட்ஸ்: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/03/20/1852294-cm.webp)
லைவ் அப்டேட்ஸ்: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.
- பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னை:
2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-
* வரும் நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். உரிமைத் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அண்ணா பிறந்தநாளான செப்.15-ந்தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
* நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு.
* சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்.
* வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.
* பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.
* பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
* சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.
Live Updates
- 20 March 2023 10:59 AM IST
கடல் அரிப்பு, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடியில் நெய்தல் மீட்பு இயக்கம்.
- 20 March 2023 10:59 AM IST
கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- 20 March 2023 10:59 AM IST
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வெள்ளத்தடுப்பு பணியை மேற்கொள்ள ரூ.434 கோடி நிதி ஒதுக்கீடு.
- 20 March 2023 10:54 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிப்பு .
- 20 March 2023 10:53 AM IST
ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்வு.
- 20 March 2023 10:51 AM IST
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.