என் மலர்
உள்ளூர் செய்திகள்
லைவ் அப்டேட்ஸ்: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு
- வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.
- பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னை:
2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-
* வரும் நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். உரிமைத் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அண்ணா பிறந்தநாளான செப்.15-ந்தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
* நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு.
* சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்.
* வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.
* பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.
* பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
* சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.
Live Updates
- 20 March 2023 10:49 AM IST
வடசென்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
- 20 March 2023 10:46 AM IST
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
- 20 March 2023 10:43 AM IST
அயோத்தி தாசர் பண்டிதர் பெயரில் ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைக்க ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.
- 20 March 2023 10:43 AM IST
மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்படும்.
- 20 March 2023 10:38 AM IST
ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் - நிதியமைச்சர்
- 20 March 2023 10:37 AM IST
தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம் வாங்கப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- 20 March 2023 10:36 AM IST
ரூ.25 கோடியில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்.
- 20 March 2023 10:36 AM IST
உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்