search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லைவ் அப்டேட்ஸ்: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    லைவ் அப்டேட்ஸ்: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு

    • வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.
    • பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.

    சென்னை:

    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    * வரும் நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். உரிமைத் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அண்ணா பிறந்தநாளான செப்.15-ந்தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    * நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு.

    * சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்.

    * வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.

    * பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.

    * பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

    * சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.

    Live Updates

    • 20 March 2023 10:29 AM IST

      பள்ளிக்கல்வியில் மாணவ சேர்க்கை உயர்ந்துள்ளது.

    • 20 March 2023 10:29 AM IST

      சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

    • 20 March 2023 10:29 AM IST

      தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தக திருவிழா நடத்தப்படும்.

    • 20 March 2023 10:22 AM IST

      வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம்.

    • 20 March 2023 10:20 AM IST

      மாநிலம் முழுவதும் 25 பகுதிகளில் நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படும்

    • 20 March 2023 10:20 AM IST

      சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சையில் சோழர் அருங்காட்சியம் அமைக்கப்படும்.

    • 20 March 2023 10:20 AM IST

      இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் ரூ.223 கோடி செலவில் கட்டப்படும்.

    • 20 March 2023 10:20 AM IST

      711 தொழில் நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் செயல்படுத்தப்படும்.

    • 20 March 2023 10:19 AM IST

      கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.

    • 20 March 2023 10:13 AM IST

      அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.

    Next Story
    ×