search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்துகளை தடுக்க   4 வேகத்தடைகள் அமைப்பு
    X

    விபத்துகளை தடுக்க 4 வேகத்தடைகள் அமைப்பு

    • பொள்ளாச்சி மெயின் ரோடு 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும்.
    • வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை எழுந்தது.

    குனியமுத்தூர்,

    பொள்ளாச்சி மெயின் ரோடு 24 மணி நேரமும் பரபரப்பாகவும் காணப்படும் பகுதியாகும். குறிப்பாக ஆற்று பாலத்தில் இருந்து சுந்தராபுரம் வரை அதிவேகமாக பயணிக்க கூடிய சூழலில் அச்சாலை அமைந்து உள்ளது.

    தினமும் கோவைக்கு இருசக்கர வாகனத்திலும், நான்கு சக்கர வாகனத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கிருந்து வேலை விஷயமாக பயணிக்கின்றனர்.

    மதுரை, பழனி, மடத்துக்குளம், ஒட்டன்சத்திரம், உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுந்தராபுரம் ஆகிய பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பஸ்கள் அனைத்தும் கோவைக்கு இந்த வழியாக தான் வந்தாக வேண்டும்.

    இந்நிலையில் இப்பகுதியில் வேகத்தை குறைக்கும் காரணிகள் எதுவும் கிடையாது. எனவே அனைத்து வாகனங்க ளும் மிக வேகமாக செல்லக்கூடிய சூழ்நிலை இருந்தது. இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டது.

    மேலும் பொங்காளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம். அவர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் இந்த பகுதியை கடக்கும் போது தினமும் விபத்துகள் ஏற்படும் வழக்கமான சூழ்நிலை உள்ளது.

    எனவே இங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து கோவை-பொள்ளாச்சி மெயின் ரோடு ஆத்துபாலத்தை அடுத்த சுந்தராபுரம் செல்லும் சாலையில் குறிச்சி பொங்காளியம்மன் கோவில் அருகே விபத்தை தடுக்க 4 வேகத்தடைகள் நெடுஞ்சாலை துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    வரவேற்பு

    இந்த சாலையில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் அதிகமான வாகனங்கள் செல்லும். மேலும் வாகனங்கள் அனைத்தும் மிக அதி வேகமாக செல்வதால் தினமும் விபத்துகள் இப்பகுதியில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் கூட கல்லூரி மாணவர்கள் 3 பேர் விபத்தில் சிக்கி 2 பேர் இறந்த சம்பவமும் நடந்தது.

    இதனைக் கண்ட நெடுஞ்சாலைத்துறையினர் பொங்காளியம்மன் கோவில் அருகே, 4 இடத்தில் வேகத்தடைகள் அமைத்துள்ளனர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்கின்றன. எண்ணற்ற விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார். இதனை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வரவேற்றுள்ளனர்.

    Next Story
    ×