search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே பணிகள் முடிந்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பறை
    X

    மேற்குமரியநாதபுரத்தில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை.

    திண்டுக்கல் அருகே பணிகள் முடிந்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பறை

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2016-ம் ஆண்டு ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.
    • கழிப்பறை கட்டி 4 ஆண்டுகளாகியும், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் சுகாதாரமின்றி கிடப்பதாக மக்கள் புகார்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மரியநாதபுரத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதி மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக மேற்கு மரியநாதபுரம் மெயின் ரோட்டில் சுகாதார வளாகம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2016-ம் ஆண்டு ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    பின்னர் பணிகள் முடிந்தும் இதுவரை கழிப்பறை திறக்கப்படாமல் உள்ளதால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் பொது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கழிப்பறை கட்டப்பட்டது.

    ஆனால் இந்த கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படாமல் சுகாதாரம் கேள்விக்குறியாகும் சூழ்நிலையில் உள்ளது. ஆண்டுதோறும் கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இருந்தாலும் எங்கள் பகுதியில் கழிப்பறை கட்டி 4 ஆண்டுகளாகியும், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் சுகாதாரமின்றி புதர் மண்டிக் கிடப்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு 4 ஆண்டுகளாக காட்சி பொருளாக விளங்கும் கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×