என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சாய்தளத்துடன் கூடிய கழிப்பிடம் திறப்பு
Byமாலை மலர்27 April 2023 7:34 PM IST
- பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
- மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகமான சாய்தளத்துடன் கூடிய கழிப்பிடம் திறக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா முன்னிலை வகித்தார். பள்ளியின் மேலாண்மை குழு பிரதிநிதி குரு சாலமோன் அனைவரையும் வரவேற்றார். கழிப்பிட கட்டிடத்தை பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கின்ற மாற்றுத்திறனாளி மாணவன் சந்தோஷ் ரிப்பன் வெட்டி திறந்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பார்களாக மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர், 5வது வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி தன்ராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமதி ராஜேஷ், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X