என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்19 Jun 2022 10:32 AM IST
- கோடை சீசன் முடிந்த பின்னரும் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
- சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:
கோடை சீசன் முடிந்த பின்னரும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் குவிந்தன.
இதனால் மோயர்பாயிண்ட், குணாகுகை, கோக்கர்ஸ்வாக், பைன் பாரஸ்ட், தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் நகரின் முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைத்தபோதும் தொடர்ந்து வாகனங்கள் வந்ததால் நெருக்கடி அதிகரித்தே காணப்பட்டது. தொடர் மழையால் மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகள் தோன்றியுள்ளது. மேலும் எங்கும் பச்சைபசேல் என கண்ணை கவரும் வண்ணம் உள்ளது.சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
X