search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • மலை ரெயிலில் குடும்பத்துடன் உற்சாக பயணம்
    • வெளியூர் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், வானுயர ஓங்கி வளர்ந்து காணப்படும் மலைகள்-மரங்களும், வெள்ளியை உருக்கினாற்போல விழும் நீர்வீழ்ச்சிகளும், அழகிய புல்வெளிகளும் காண்போரை கவர்ந்து இழுக்கும் வனப்புடன் திகழ்கின்றன. எனவே அங்கு சுற்றுலா பயணி களின் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும்.

    தமிழகத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வார விடுமுறைகள் என 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். எனவே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலம்- மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் நீலகிரியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க குடும்பத்துடன் திரண்டு வந்து உள்ளனர்.அவர்கள் ஊட்டி மற்றும் சுற்றுலா தலங்களில் நிலவும் குளு குளு சீசனை அனுபவித்து வருகின்றனர். அங்கு உள்ள மிகப்பெரிய புல்வெளிகளில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதை கழித்து வருகின்றனர்.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உலக புகழ்பெற்ற மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டு வர். எனவே மலைரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய எப்போதுமே கூட்டம் அலைமோதும்.

    இதை கருத்தில் கொண்டு கோடை சீசனுக்கு இணையாக ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    அதன்படி மலை ரெயில் இயக்கபட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். செல்லும் வழியில் உள்ள குகைகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டு ரசித்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் எண்ணற்ற சுற்றுலா பயணிகளை பார்க்க முடிந்தது. அவர்கள் குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்து அங்கு உள்ள இயற்கை காட்சிகளை சுற்றி பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

    தொடர்ந்து கண்ணடி மாளிகை உள்ளிட்ட இடங்களில் அழகிய மலர் அலங்காரங்களை நேரில் கண்டு ரசித்தனர். மேலும் ஊட்டி ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.

    பின்னர் தென்னிந்தியா வின் மிக உயர்ந்த மலை சிகரம் தொட்டப்பெட்டா வுக்கு சென்று அங்கு இருந்த இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டு ரசித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு, கோத்தகிரி, கேத்தரின் நீர்வீழ்ச்சி, குன்னூர் டால்பி ன்நோஸ், லேம்ஸ்ராக், கூடலூர் தவலைமலை, முதுமலை புலிகள் சரனா லம் என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பு காரண மாக நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. எனவே அங்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் அனைத்துசாலைகளிலும் வாகன நெரிசலை சீர்படுத்தி வருகின்றனர்.

    ஊட்டியில் தற்போது மழை குறைந்து இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா தலங்களில் மகிழ்ச்சியுடன் வலம்வருகின்றனர்.

    நீலகிரியில் அதிகளவில் சுற்னுலா பயணிகள் குவிந்து உள்ளதால் அங்கு உள்ள தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை. மேலும் விடுதி ஊழியர்கள் அதிக வாடகை கேட்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×