என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் ரெயில்வே பாலம் விரிவாக்க பணி தொடங்கியதால் போக்குவரத்து மாற்றம்

- நேற்று முதல் தேன்கனிக்கோட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
- ஒன்னல்வாடி சென்று, அங்கிருந்து ஜொன–பெண்டா சாலை வழியாகவும், வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலுள்ள தேன்கனிக்–கோட்டை சாலையில், ஆர்.சி., தேவாலயம் அருகே, சாலையின் குறுக்கே ரெயில்வே பாலம் உள்ளது. இதை விரிவாக்கம் செய்யும் பணி, ரெயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று தொடங்கியது.
அத்துடன், கர்நாடகாவில் இருந்து ஓசூர் வரை, ரெயில்வே பாதை அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது. இதனால் நேற்று முதல் தேன்கனிக்கோட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள், தேன்கனிக்கோட்டை சாலையில் செல்லாமல் தடுத்து, ரெயில்வே நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள், தளி சாலையில் சென்று, அத்திவாடி ஜங்ஷனில் இடதுபுறமாக திரும்பி, மத்திகிரி கூட்ரோட்டை அடைந்து, அங்கிருந்து வேண்டிய பகுதிக்கு சென்றன.
ஒன்னல்வாடி சென்று, அங்கிருந்து ஜொன–பெண்டா சாலை வழியாகவும், வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
இந்த வாகன போக்குவரத்து மாற்றம் காரணமாக, ஓசூர் இன்னர் ரிங்ரோடு, ரெயில்வே சுரங்கப்பாதை, தளி சாலை போன்றவற்றில், நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இன்னும் 7 மாதங்களுக்கு இந்த வாகன போக்குவரத்து நடைமு–றையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.