என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது
Byமாலை மலர்11 July 2022 3:06 PM IST
- வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை கைது செய்தனர்.
- 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை
திருச்சி:
பாலக்கரை ரயில்வே காலனி பகுதியில் உள்ள கெம்ஸ் டவுன்செல்லும் சாலையில், நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவரான அமல்ராஜ் இடம் மூன்று பேர் கத்தியை காட்டி அவர் கையில் வைத்திருந்த பணத்தை பிடுங்கி சென்றுள்ளனர். இதுகுறித்து அமல்ராஜ் பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோரிமேடு பகுதியை சேர்ந்த அருண்குமார், அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜசேகர், கூனி பஜார் பகுதியில் சேர்ந்த நவாப் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் அருண்குமார் மீது ஏற்கனவே 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. அதேபோல் ராஜசேகர் மீது இரண்டு வழக்குகளும் நவாப் மீது ஒரு வழக்கும் விசாரணையில் உள்ளது. மேலும் கைதான நபர்களிடமிருந்து மூன்று கத்தி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
X