என் மலர்
உள்ளூர் செய்திகள்

முசிறியில் 781 கிலோ குட்கா பறிமுதல்-3 பேர் கைது

- முசிறியில் 781 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
- கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சிபட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்தி விநாயகம், போலீசார் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சி பட்டியில் உள்ள சேகர் என்பவரது வீட்டின் அருகே கண்டெய்னர் லாரியிலிருந்து, டாட்டா ஏசி வாகனத்தில் மூட்டைகள் மாற்றப்படுவது கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லட்சக்கணக்கான மதிப்பு உள்ள 30க்கும் மேற்பட்ட குட்கா பான் மசாலா மூட்டைகள் கொண்ட போதைப் பொருட்கள் மாற்றப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து விசாரணை செய்ததில் புனேவிலிருந்து தஞ்சாவூருக்கு பைப் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரான விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த அழகர் மகன் வெள்ளைச்சாமி (வயது 23), கிளினர் அசுரப்பட்டி விராலிமலை அகர பட்டியை சேர்ந்த வேலு மகன் சீனிவாசன் ( வயது 25), ஆகிய இருவரும், நாமக்கல்லில் உள்ள லாரி உரிமையாளருக்கு தெரியாமல் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கடத்தி வந்த குட்கா பொருட்களை காமாட்சி பட்டி அருகே டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டுநர் சூரம்பட்டி செல்லிபாளையம் சோழன் மகன் திவாகர் ( வயது 23 )ஏற்ற சென்றுள்ளார். அங்கு மடக்கி பிடித்த முசிறி போலீசார் மூவரையும் கைது செய்து 781 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.