என் மலர்
உள்ளூர் செய்திகள்
கண்டக்டருக்கு சரமாரி அடி-உதை
- அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்ன கண்டக்டருக்கு சரமாரி அடி - உதை விழுந்தது
- 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை
திருச்சி,
திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 48). இவர் துவாக்குடி அரசு போக்குவரத்து கழக டெப்போவில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு செல்லும் பஸ்சில் காந்திராஜன் கண்டக்டராக பணியில் இருந்தார்.அப்போது அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பஸ் நிறுத்தம் பகுதியில் 2 வாலிபர்கள் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏற முயற்சித்தனர். இதைப் பார்த்த கண்டக்டர் முன்பக்கத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறும்படி அறிவுறுத்தினார். அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் முன்பக்க படிக்கட்டு வழியாக 2 பேரும் ஏறினர். கண்டக்டர் அவர்களிடம் பின்னால் தள்ளிச் செல்லும்படி கூறி டிக்கெட் எடுக்க சொன்னார். அப்போது டிக்கெட் எடுக்க மறுத்த அந்த வாலிபர்கள் 2 பேரும் கண்டக்டரை தகாத கெட்ட வார்த்தைகளால் திட்டி கைகளால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து காந்தி ராஜன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அரசு பேருந்தில் பணியில் இருந்த கண்டக்டரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.